ஆஹா.. அடிச்சு வெளுக்குதே! நேற்று முதல் வானிலையில் திடீர் ட்விஸ்ட்.. தமிழ்நாடு மக்களுக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. திடீரென என்று 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மாலையும், இரவும் கோடை மழை பெய்தது.

தென் மாவட்டங்களில் நீடிக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி வருகிறது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 Huge twist in Tamil Nadu Weather: Heavy rain in many districts after the scorching temperature for the last few days

சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக வடஇந்தியாவில் வெப்பநிலை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது.

வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மழை:

இந்தநிலையில் தான் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. திடீரென என்று 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று மாலையும், இரவும் கோடை மழை பெய்தது.

தென் மாவட்டங்களில் நீடிக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. சென்னையில் லேசான சாரல் மழை பெய்தது.

அடுத்த 2 நாட்களுக்கு தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும். சில இடங்களில் நீண்ட நேரம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திடீர்மழை காரணமாக சென்னையில் உள்ள ஏரிகளில், புழல் ஏரியில் நீர்இருப்பு 2,432 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 225 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம்

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 778 மில்லியன் கனஅடியாக உள்ளது.

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 471 மில்லியன் கனஅடியாக உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த கோடை மழை பெய்து உள்ளது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

வெயில்:

அடுத்த 3-5 நாட்கள் கழித்து வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. கடந்த வாரம் முழுக்க சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

நேற்று முதல்நாள் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104.36°F வெயில் பதிவாகியுள்ளது.

 Huge twist in Tamil Nadu Weather: Heavy rain in many districts after the scorching temperature for the last few days

திருப்பத்தூர் 104.36°F
ஈரோடு 104.00°F
சேலம் 103.28°F
நாமக்கல் 103.10°F
கரூர் 102.56°F
வேலூர் 102.02°F
திருச்சி 100.58°F
திருத்தணி 100.58°F
தர்மபுரி 100.4°F
மதுரை 100.04°F வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் வரும் வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது.:

இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியாஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+