அன்ரிசர்வ்டு பெட்டிக்கு புதிய ரூல்ஸ்! இனிமே இந்த கார்டு இருந்தாலே போதும்.. ரயில்வே மாஸ் வசதி
சென்னை: ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மிக முக்கியமான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சாதாரண மற்றும் விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில் பயணிப்பதற்கான விதிமுறைகளை ரயில்வே வாரியம் தற்போது தளர்த்தியுள்ளது. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, ரயில் பயணத்தை மேலும் எளிமையாகவும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இனி காண்போம்.
இது குறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்திய ரயில்வே வாரியம் சார்பில் இயக்கப்படும், ஒவ்வொரு சாதாரண மற்றும் விரைவு ரயில்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயணிக்க, ரயில்வே வாரியம் வழங்கும் கட்டண சலுகை, பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

ரயில்வே தந்த சர்ப்ரைஸ்
இதர மாற்றுத் திறனாளிகள், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர். இந்நிலையில், தேசிய மாற்றுத் திறனாளி நலத்துறை வாயிலாக, யுடிஐடி என்னும் தனித்துவமான அடையாள அட்டை பெற்ற அனைவரும், இப்பெட்டிகளில் பயணிக்கலாம்.
ரயில்வே வாரியத்தின் கட்டண சலுகை பாஸ் பெற்றவர்களும் இப்பெட்டிகளில் பயணிக்கலாம். அத்தகைய பாஸ் பெறாத மாற்றுத் திறனாளிகள், கட்டண டிக்கெட் பெற்று, தங்கள் யுடிஐடி அட்டையை காட்டி, இந்த சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்.
அனுமதியின்றி இப்பெட்டியில் பயணிக்கும் இதர பயணிகள் மீது, ரயில்வே சட்டத்தின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பெட்டிகள் - கட்டண சலுகை பாஸ்
இதுவரை ரயில்வே வாரியம் வழங்கிய கட்டணச் சலுகை பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தச் சிறப்பு பெட்டிகளைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி தேசிய அளவிலான அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வசதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ..
ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் பயணிக்க, இனி, யுடிஐடி என்னும் தேசிய தனித்துவமான அடையாள அட்டை பயன்படுத்தலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ரயில்வே தந்த நல்ல செய்தி - பயணிகள் மகிழ்ச்சி
மேலும், ரயில்வே வாரியத்தின் பிரத்யேக சலுகை பாஸ் இல்லாதவர்கள் பொதுப் பெட்டிகளில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பயணிக்கும் நிலை இதுவரை இருந்தது.. ஆனால் இனி யுடிஐடி (UDID) அட்டை வைத்திருக்கும் அனைவரும் தங்களுக்குரிய சிறப்புப் பெட்டிகளிலேயே பயணிக்க முடியும் என்பது மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
இதனால் அவசரப் பயணங்களின் போது சலுகை பாஸிற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்தப் பெட்டிகளில் தகுதியற்ற நபர்கள் பயணித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான இடவசதி மற்றும் பாதுகாப்பு இனி முழுமையாக உறுதி செய்யப்படும். மொத்தத்தில், இந்த மாற்றம் அவர்களின் பயணத்தை எளிமையாகவும் கௌரவமானதாகவும் மாற்றியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications