ஸ்பாட்டுக்கே போய்.. "அங்கேயே" போனை போட்டு.. சேர்ல உட்கார்ந்திருப்பது யார்னு பாருங்க..திகைத்த தி.நகர்
சென்னை: ஆவின் பால் விற்பனை தொடர்பாக அடுத்தடுத்த அதிரடிகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், பால்வளத்துறை அமைச்சரின் அதிரடி ஆய்வுகளும் தொடர்ந்தபடியே உள்ளன.
ஆவின் நிறுவனம் தினமும் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 6.5 லட்சம் லிட்டர் பால் விற்பனையை செய்து வருகிறது. இதில் 4 லட்சம் லிட்டர் நீல நிற பால் பாக்கெட்டுகளும், 2 லட்சம் லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகளும், 7 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

பால் பாக்கெட்: மாதாந்திர அட்டைகள் மூலம் பால் பாக்கெட் பெறுபவர்கள் அதற்கான தொகையையும் முன்கூட்டியே செலுத்தி விடுகிறார்கள்.. இந்நிலையில், ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்ப்யூட்டரில் இருந்து போலி மாதாந்திர அட்டைகளை அகற்ற ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதனால்தான், ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் வாங்கும் கஸ்டமர்கள், ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிப்பதற்காக, நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் ரேஷன் கார்டு அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பிறகே, தங்களுடைய மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க முடியும். மேலும் பால் அட்டைதாரர்கள் தாங்களாகவே மண்டல அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை வழங்கி அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.
போலி அட்டைகள்: ஒரு ரேஷன் கார்டுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புதான், வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால், போலி மாதாந்திர பால் அட்டைகள் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தபடியே இருந்த நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆவின் நிறுவனங்களுக்கும் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்துவதையும் அதிகப்படுத்தி உள்ளார் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். பால் பண்ணை, பால் நிரப்பும் செயல்முறை மற்றும் ஆலையில் பராமரிக்கப்படும் சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களை நேரடியாகவே சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டும் வருகிறார்.
ஆவின் விற்பனை: அப்படித்தான், நேற்றும் தி.நகர் மண்டல அலுவலக வாயிலில் உள்ள ஆவின் விற்பனை நிலையத்தை ஆய்வு செய்தார்.. அப்போது அங்கு வந்திருந்த கஸ்டமர்களிடமும், ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் குறித்த கருத்தை கேட்டறிந்தார். பிறகு, ஆவின் தி.நகர் மண்டல அலுவலகத்தை ஆய்வு செய்ததுடன், அங்கு மாதந்திர பால் அட்டை விற்பனை குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார்.
கஸ்டமர்களுக்கு போனை போட்டு, பால் அட்டை புதுப்பித்தல் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். திடீரென உள்ளே அமைச்சர் நுழைந்ததுமே, ஊழியர்கள் திகைத்துவிட்டனர்.. அங்கிருந்த ஒரு சேரில் உட்கார்ந்து, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் மூலம் மாதாந்திர பால் அட்டைகள் விற்பனை மற்றும் அதன் பயனாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் கேட்டறிந்தார்.
ஆலோசனை: மேலும், மாதாந்திர பால் அட்டை நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும், ஆன்லைன் மூலம், பால் அட்டை விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்றார் அமைச்சர். இனி மற்ற மாவட்டங்களிலும் அதிரடி ஆய்வுகள் தொடரும் என்பதால், பம்பரமாய் சுற்றி சுழன்றி கொண்டிருக்கிறது ஆவின் விற்பனை நிலையங்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications