பத்திரப்பதிவு.. இனிமேல் எந்த ஆவணத்தையும் மாற்ற முடியாது.. காரணம் என்ன தெரியுமா.. தமிழக அரசு அதிரடி
சென்னை: பத்திரப்பதிவு முறைகளில் பொதுமக்களின் வசதிக்காக, எத்தனையோ மாற்றங்களும், அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இப்போதும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது... குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.

ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை.. மேலும், போலிப் பத்திரப்பதிவும் ஒழிந்திருக்கிறது. போலி பத்திரப்பதிவு புதிய சட்டத்தின்படி, இதுவரை 2,500 போலிப் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன...
பத்திரப்பதிவு: அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது.
காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக, திருமணம், சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது.
திருத்த முடியாது: மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரையிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது. அதுமட்டுமல்லாமல், ஒளி வருடல் செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதன் மூலம் மெய் தன்மை உறுதி செய்யப்படும். இப்போது, ஆவணங்கள் அனைத்திலும் 1-5-2023-க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத்துறை ஐஜி இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, அந்த உத்தரவில் மேலும் சொல்லும்போது, "ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களை பிரித்து எடுத்து சேமித்து வைப்பதன் மூலமாக அவற்றின் மெய்த்தன்மை எந்த காலத்திலும் உறுதி செய்யப்படும்.. நம்பிக்கை இணையத்திட்டமானது, பதிவு துறையில் கடந்த 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது..
இணையதளம்: நம்பிக்கை இணையம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அனைத்து சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கென அலுவலகத்தில் மட்டுமே செயல்படத்தக்க வகையிலான ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்ட ஆவணங்களின் நகல்களை பொதுமக்கள் கோரினால், உரிய விண்ணப்பத்தின் அடிப்படையில் அவற்றை வழங்கலாம்.. ஆனால், அப்படி வழங்கும்போது, நம்பிக்கை இணையத்தின் இலச்சினை சான்றிட்ட நகரின் இடதுபுறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அவ்வாறு அச்சிடப்பட்டிருந்தால் அந்த ஆவணங்கள் நம்பிக்கை இணையம் வழிசரிபார்க்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை இணையம்: நம்பிக்கை இணையம் என்பது குடிமக்களின் ஆவணங்கள், தரவுகளை பாதுகாப்பான முறையில் சேமிக்க அரசு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு இணையவழி அமைப்பாகும். அத்துமீறி ஆவணங்களை திருடுவது, ஆவணங்களை கசிய விடுவது போன்றவற்றில் இருந்து பொதுமக்களின் ஆவணங்களை காக்கவே இந்த நம்பிக்கை இணையம் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications