பற்களை பிடுங்கியதாக புகார்..பல்பீர் சிங் சஸ்பெண்ட்..நேரில் ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் சம்மன்
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை விசாரணைக்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 3ஆம் தேதி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பல்பீர் சிங். அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது பற்களை பிடுங்கி குரூரமாக சித்திரவதை செய்வதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த வாரம் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்ததாக கூறப்படும் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இவை கூடுதல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து வாலிபரின் பற்களைப் பிடுங்கி எடுத்ததாக பாதிக்கப்பட்ட வாலிபர் குற்றம் சாட்டியுள்ளார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனா, புரட்சி பாரதம் உள்ளிட்ட சில அமைப்புகள் போராட்டங்களை அறிவித்தனர்.

காத்திருப்போர் பட்டியல்
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலமை நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்பீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

சட்டசபையில் அறிவிப்பு
இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மனித உரிமைகள் ஆணையம்
ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியாகவே அந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

5 பேரிடம் விசாரணை
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி முத்து, சுபாஷ், வேத நாராயணன் உள்ளிட்ட 5 பேர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைவர் முன் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். இவர்களிடம் எஸ்பி, மகேஸ்வரன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஆஜரான 5 பேரிடம், பல் உடைப்பு சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

பல்பீர் சிங் ஆஜராக சம்மன்
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் வரும் ஏப்ரல் 3ம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தபடி பல்பீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து தென் மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications