Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஒரே கையெழுத்தில் ஓஹோன்னு வாழ்க்கை.. கோடிகளை குவித்த தம்பதிக்கு மறக்க முடியாத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் என்பவர், பூந்தமல்லி முத்து நகரில் வேலைவாய்ப்பு அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது நிறுவனம் மூலம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் உள்பட தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலத்துக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்புகிறார். இவரது நிறுவனத்தில் ரூ.10 கோடி மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.

நம்பிக்கையானவர்களை நம்பித்தான் நிறுவனங்கள் வரவு செலவு கணக்கை ஒப்படைக்கும். சிறிய நிறுவனங்களை நடத்தும் முதலாளிகள் பலர் தங்களது நிறுவனத்தில் நம்பிக்கையாளர்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வார்கள். தங்கம் வாங்கி வருவது, பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வது போன்ற பணிகளை நம்பிக்கையானவர்களே செய்வார்கள்.. அப்படி நம்பிக்கையானவர்கள் நம்பிக்கை துரோகம் செய்தால் எப்படி இருக்கும்.. அப்படி நம்பிக்கை துரோகம் செய்து 10 கோடி மோசடி செய்துவிட்டதாக கணவன் மனைவி கைதாகி உள்ளனர்.

Husband and wife arrested for defrauding a private company of Rs 10 crore near Avadi

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 59 வயதாகும் அசோகன் என்பவர், பூந்தமல்லி முத்து நகரில் பல்வேறு வகையான வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனம் மூலம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் உள்பட தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலத்துக்கும் என்ஜினீயர் முதல் கடைநிலை ஊழியர் வரை வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அசோகனின் இந்த நிறுவனத்தில் மாங்காடு அண்ணா தெருவை சேர்ந்த 57 வயதாகும் கிருஷ்ணகுமார் என்பவர் கணக்கராகவும், அவருக்கு உதவியாக அவருடைய மனைவி விஜயலட்சுமி (38) என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள்.

நன்றாக கணக்கு வழக்குகளை பார்த்த காரணத்தால், கிருஷ்ணகுமார், அசோகனின் நம்பிக்கைக்குரியவராக மாறினாராம். இதனால் அசோக்குமார் நிறுவனத்துக்கு ஆட்களை எடுப்பதற்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது கணவன்-மனைவி இருவரும் கம்பெனி வரவு-செலவு கணக்குகளை கவனித்து வந்திருக்கிறார்கள்.

இதற்காக அசோகனிடம் நிரப்பப்படாத காசோலை மற்றும் ஆவணங்களில் கையெழுத்து வாங்கி, அதன் மூலம் ரூ.10 கோடி வரை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடி பற்றி ஒரு கட்டத்தில் அறிந்த அசோகன், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில், மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கிருஷ்ணகுமாரின் நண்பரான அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியை சேர்ந்த இளங்கோவன் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+