வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களே இவர்களது குறி.. கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னை தம்பதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாடு சென்று படிக்க முயற்சித்து வரும் மாணவர்களை குறி வைத்து ஏமாற்றி வரும் தம்பதிகள் குறித்து விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான முயற்சிகளை எடுத்தார்.

இவரது தூரத்து உறவினர்களான சௌகார்த்திகா, அவரது கணவர் கார்த்தி ஆகியோர் தாங்கள் ரித்விக் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

எனவே வெங்கடேஷையும் இங்கிலாந்தில் உள்ள சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிடுவதாக கூறியிருந்தனர். இதை நம்பிய வெங்கடேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தவணை முறையில் இந்த தம்பதியிடம் ரூ.38 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

மேலும் வெங்கடேஷ் இங்கிலாந்தில் படிப்பதற்கான ஆவணங்கள் மற்றும் விசா ஆகியவற்றையும் தம்பதி கொடுத்துள்ளனர். வெங்கடேஷ் அதை சோதனை செய்து பார்த்த போது அது போலி என தெரியவந்தது. இதையடுத்து சௌகார்த்திகா மற்றும் காத்திக்கை வெங்கடேஷ் தொடர்பு கொண்டு கேட்டார்.

ஸ்விட்ச் ஆப்

ஸ்விட்ச் ஆப்

அப்போது அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2020 ஆம் ஆண்டு வெங்கடேஷ் புகார் அளித்தார். விசாரணையில் கார்த்திக் தம்பதி வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை குறி வைத்து ஏமாற்றி வருவது தெரியவந்தது.

விருகம்பாக்கம் போலீஸார்

விருகம்பாக்கம் போலீஸார்

மேலும் இவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் கார்த்திக்கை விருகம்பாக்கம் போலீஸார் கைது செய்துவிட்டனர். இவரது மனைவி சௌகார்த்திகாவை தேடி வருகிறார்கள். கார்த்திகை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+