புடவையில் தூக்கு போட்டு கொண்டு இறந்த மனைவி.. மறு முந்தானையில் தொங்கி உயிர் விட்ட கணவர்!
சென்னை அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
Recommended Video
சென்னை: புடவையில் தூக்கு போட்டு கொண்டு மனைவி தொங்க.. அதை பார்த்து பதறி போன கணவனும் அதே புடவையில் தூக்கில் தொங்கிய சம்பவம் சென்னை மக்களை உலுக்கி உள்ளது.
செங்குன்றம் ஜிஎன்டி சாலை அருகே சாமியார் மடம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மதன். இவருக்கு 38 வயதாகிறது. டாட்டா ஏசி வாகனத்தை வாடகைக்கு விட்டு அதன் மூலம் தொழில் புரிந்து வருகிறார்
மனைவி பெயர் கௌசல்யா. வயசு 35. 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் இவர்களுக்கு 9 வயதில் வெற்றிமாறன் என்ற மகனும், பிரவீனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். ரெண்டு பேருமே ஒரு பிரைவேட் ஸ்கூலில் படித்து வருகிறார்கள்.

ரூமுக்கு ஓடினார்
புருஷன் - பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே எப்பவுமே சண்டையும் தகராறுமாக இருக்குமாம். இப்படித்தான் நேற்று மதியானமும் சண்டை வந்துள்ளது. இதில் ஒரு கட்டத்தில் மனசு வெறுத்துபோன கௌசல்யா, புடவையை எடுத்து கொண்டு ஒரு ரூமுக்குள் ஓடினார்.

ஒரே புடவை
அங்கு ஃபேனில் தூக்கு மாட்டி கொண்டு சிறிது நேரத்தில் பிணமானார். இதை பார்த்து அலறிய மதனும் அதே புடவையில் தூக்கிட்டு தொங்கினார். இருவருமே ஒரே புடவையில் அடுத்தடுத்து ஒன்றாக தூக்கு போட்டு தொங்கினார்கள்.

கதறினார்கள்
சாயங்காலம் ஸ்கூல் விட்டு குழந்தைகள் 2 பேரும் வீட்டுக்கு வந்தால், வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக 2 குழந்தைகளும் எட்டி பார்த்தால், அம்மா-அப்பா ரெண்டு பேருமே இறந்த நிலையில் கிடந்ததை கண்டு கதறினார்கள்.

விசாரணை
உடனடியாக செங்குன்றம் போலீசில் தகவல் சொல்லப்பட்டது. விரைந்துவந்த போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றவர்களை பறிகொடுத்த 2 பிஞ்சுகளும் தவித்த தவிப்பையும், கதறி அழுததையும் கண்டு அப்பகுதி மக்களும் கண்கலங்கினார்கள்.
-
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications