மீன்குழம்பால் வந்த சண்டை.. தூக்கில் தொங்கிய கணவன்.. படுகாயங்களுடன் மனைவி சீரியஸ்.. சென்னையில்..!

சென்னையில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி கிருத்திகையில் மீன் குழம்பு வைத்ததால், தம்பதிக்கு இடையே நடந்த தகராறில், கணவன் தூக்கு போட்டு தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார்... இவர் ஒரு பெயிண்டர்.. மனைவி பெயர் துர்கா.. வீட்டு வேலை செய்து வருகிறார். மோகன், ஜீவா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு குமார் வேலையை முடித்துக்கொண்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போது குமாருக்கு துர்கா சாப்பாடு பரிமாறினார்.. சாதம் போட்டுவிட்டு மீன் குழம்பு ஊற்றி உள்ளார்.. மீன் குழம்பை பார்த்ததும் குமார் டென்ஷன் ஆகி விட்டார்.

 தகராறு

தகராறு

"இன்று ஆடி கிருத்திகை நாளாச்சே.. எதுக்காக மீன் குழம்பு செய்தாய்?" என்று கேட்டுள்ளார்.. இதுவே தம்பதிக்குள் வாக்குவாதமாக வெடித்தது.. வீட்டில் இவர்களின் சண்டையை பார்த்ததும், மகன்கள் 2 பேரும் பக்கத்தில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.. பிறகு சிறிது நேரம் கழித்து சண்டை ஓய்ந்திருக்கும் என்று நினைத்து வீட்டிற்குள் நுழைந்தனர்..

சிகிச்சை

சிகிச்சை

அப்போது, அப்பா தூக்கில் பிணமாகவும, அம்மா ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதையும் கண்டு அலறினர். அவர்களின் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள் ஓடிவந்தனர்.. பிறகு கொரட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் குமாரின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்...

கம்பி

கம்பி

உயிருக்கு போராடி கொண்டிருந்த துர்காவை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. தற்போது சிகிச்சை நடந்து வருகிறது. போலீசார் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், மீன் குழம்பு வைத்தது தொடர்பாக தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போது ஆத்திரம் அடைந்த குமார், துர்காவை பக்கத்தில் இருந்த ஒரு கம்பியை எடுத்து மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்..

 மீன்குழம்பு

மீன்குழம்பு

அதில் துர்கா ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கி விழுந்துள்ளர்.. ஆனால், அவர் இறந்துவிட்டதாக நினைத்து குமார் பயந்துவிட்டார்.. அதனால்தான், உடனே தன்னுடைய வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. மீன்குழம்புக்காக தற்கொலை வரை சென்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+