62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்
மனைவியை தீ வைத்து எரித்த கணவன் கைது செய்யப்பட்டார்
சென்னை: "வாழ்ந்தால் கோவிந்தசாமியோடுதான்.. கோவிந்தசாமியை விட்டு வரமாட்டேன்.." என்று 62 வயது கள்ளக்காதலனை வைத்து கொண்டே, தாலி கட்டிய கணவரிடம் கறாராக சொல்லிவிட்டார் லட்சுமி.. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் வேல்முருகன் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றி லட்சுமியை எரித்து கொன்று விட்டார்!
சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்வேல்முருகன்.. 38 வயதான இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவரது மனைவி லட்சுமி.. 34 வயதாகிறது.. 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
லட்சுமி வீட்டு பக்கத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து கொண்டிருப்பவர் கோவிந்தசாமி.. இவருக்கு வயசு 62 ஆகிறது.. 34 வயது லட்சுமிக்கும், 62 வயது கோவிந்தசாமிக்கும்தான் லவ் வந்துவிட்டது.

வேல்முருகன்
வயதுக்கு வந்த லட்சுமியின் மகளே இந்த கண்றாவியை பார்த்து நொந்து போனார்.. உடனே அப்பாவிடமும் விஷயத்தை சொல்ல, வேல்முருகன் மனைவியை கண்டித்துள்ளார்.. இருவரிடம் தனித்தனியாக பேசி பார்த்தார், கெஞ்சி பார்த்தார், மிரட்டியும் பார்த்துவிட்டார்... ஆனால் அந்த ஜோடி அசரவே இல்லை. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டது.. கூலி வேலையும் கிடைக்காததால் வேல்முருகன் அவதிப்பட்டார்.

லாக்டவுன்
வருமானம் எங்கே என்று கேட்டு லட்சுமி துளைத்தெடுத்து கொண்டே இருந்தார். லாக்டவுனில் இவர்களின் தகராறு வீட்டிற்குள் வெடித்து கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் லட்சுமி 20 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு போய்விட்டார்.. வழக்கமாக மனைவிகள் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போவார்கள்.. ஆனால் லட்சுமியோ நேராக கள்ளக்காதலன் கோவிந்தசாமி வீட்டுக்கு போய்விட்டார்... கோவிந்தசாமியோ ஒரு தனிநபர். அந்த வீட்டில் யாருமே இல்லை.

கோவிந்தசாமி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேல்முருகன், கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று மனைவியை வீட்டுக்கு வருமாறு கெஞ்சி கூப்பிட்டார்.. மகள் அழுது கொண்டிருக்கிறாள், குடும்பம் நடத்த வா என்று பலமுறை கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கூப்பிட்டும் அவர் மறுத்துவிட்டார். "வாழ்ந்தால் கோவிந்தசாமியோடுதான்" என்று சொல்லிவிட்டார்.

காதல் ஜோடி
அத்துடன் சமாதானம் செய்ய வந்த வேல்முருகனை கோவிந்தசாமியும், லட்சுமியும் சேர்ந்து அடித்து தாக்கி உள்ளனர்.. இந்த அவமானம் தாங்காமல் வீட்டிற்கு வந்த வேல்முருகன், 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி கொண்டு விடிகாலை 5.30 மணிக்கு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டினார்.. கதவை திறந்த அந்த காதல்ஜோடி மீது மளமளவென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

உயிரிழப்பு
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத இருவரும் தீயில் துடித்தனர்.. அதற்குள் செந்தில்வேல்முருகன் அங்கிருந்து தப்பிவிடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனால் லட்சும் பரிதாபமாக உயிரிழந்தார்.. 60 சதவீதம் தீக்காயங்களுடன் கோவிந்தசாமி உயிருக்கு போராடி வருகிறார். இதையடுத்து வேல்முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications