ஓடும் காரிலேயே கீர்த்தனாவை.. அப்படியே தலைமுடியை பிடித்து இழுத்து.. மிரண்டு போன மதுராந்தகம்..!
மனைவியை கொன்ற கணவன் கைதானார்
சென்னை: படிப்புக்கும் குணத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.. அதிலும் "சந்தேகம்" என்று வந்துவிட்டால், அந்த மொத்த குடும்பமும் நாசமா போய்விட வேண்டியதான்..!
கோவையை சேர்ந்தவர் கோகுல்குமார்... இவர் ஒரு டாக்டர்.. 40 வயதாகிறது... ஒரு பிரைவேட் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வருகிறார்.. மதுராந்தங்கம் பகுதியிலேயே வீடு எடுத்து வசித்து வருகின்றனர்...
இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருக்கிறார்.. இவர் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர்.. கீர்த்தனாவுக்கு 33 வயதாகிறது. கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆகிறது.. ஆனால் குழந்தை இல்லை.

ஆஸ்பத்திரி
கீர்த்தனா மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியில் மனித வளத்துறையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டனர். அதனால், கிட்டத்தட்ட பத்து மாசத்துக்கு மேலாக கோகுல்குமாருக்கு வேலை இல்லை.. வீட்டில்தான் இருந்து வந்துள்ளார்.. ஆஸ்பத்திரி என்பதால், கீர்த்தா தினமும் வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதுதான், கீர்த்தனா மீது திடீரென கோகுல்குமாருக்கு சந்தேகம் திரும்பியது.

டார்ச்சர்
தினமும் வீட்டில் இதே பிரச்சனையாக இருந்தது.. தகராறு இவர்களுக்குள் வந்து வந்து போனது.... நாளடைவில், கீர்த்தனாவை உடல் ரீதியாகவும் கோகுல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இந்த தொல்லையும் டார்ச்சரும் தாங்காமல், கீர்த்தனா கோகுலை பிரிந்து செல்ல முடிவு செய்தார்.. 6 மாசத்துக்கு முன்னாடியே டைவர்ஸ் அப்ளை செய்துவிட்டார்.. அத்துடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கும் கிளம்பி போய்விட்டார். இது கோகுலை மேலும் கோபத்தை உண்டாக்கியது.. கீர்த்தனா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது..

கோகுல்குமார்
எனவே, கடந்த வெள்ளிக்கிழமை கீர்த்தனாவிடம் சமாதானம் பேச வேண்டும் என்று கோகுல் தனியாக அழைத்துள்ளார்.. அதை நம்பி கோகுல்குமார் காரிலும் கீர்த்தனா ஏறியுள்ளார்.. காரில் போகும்போதே மறுபடியும் சண்டை வந்துவிட்டது.. வாக்குவாதம் முற்றிப்போன நிலையில், காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து, கீர்த்தனாவை சரமாரியாக குத்திவிட்டார் கோகுல்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல், கீர்த்தனாவின் முடியை பிடித்து வெளியே இழுத்து வந்து ரோட்டில் தள்ளிவிட்டு, காரையும் ஏற்றி கொன்றுள்ளார்.

விபத்து
கீர்த்தனாவின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, கோகுலைபிடிக்க முயன்றனர்.. ஆனால், அவர் தப்பிவிட்டார். இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார்,கீர்த்தனாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கோகுல்குமாரின் கார் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே விபத்தில் சிக்கியதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.. அதனால் அங்கு விரைந்து சென்ற போலீசார் கோகுல்குமாரை கைது செய்தனர்.

சந்தேகம்
தன்னை விட 7 வயது குறைவான மனைவி என்பதால் சந்தேகமா? வீட்டிலேயே இருந்த நிலையில், மனைவி மட்டும் வேலைக்கு போனதால் சந்தேகமா? என்று தெரியவில்லை.. ஆனால் மெத்த படித்த டாக்டராகவே இருந்தால்கூட சந்தேகம் என்ற பேய் மண்டைக்குள் புகுந்து ஆட்டு ஆட்டு என ஆட்டுவித்துவிடும்போல...!
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications