அப்பா.. அப்பானு தான் கூப்பிடுவேன்.. டெல்லி கணேஷ் மறைவால் கண்கலங்கியபடி தேவயானி சொன்ன பிளாஷ்பேக்
சென்னை: ‛‛எப்போதுமே நான் அவரை அப்பா.. அப்பானு தான் கூப்பிடுவேன். அப்பா எங்க இருந்தாலும் நமக்கு ஆசீர்வாதம் கொடுக்கனும்’’ என்று மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகை தேவயானி கண்கலங்கினார்.
தமிழ் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்த நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் டெல்லி கணேஷ். சுமார் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இவர் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

இந்நிலையில் தான் நேற்று இரவு டெல்லி கணேஷ் சென்னை ராமாவரத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இவருக்கு வயது 80. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷின் மறைவால் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
டெல்லி கணேஷின் உடல் ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், பிற துறை கலைஞர்கள் நேரில் வந்து டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவருடனான உறவு பற்றிய விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் நடிகை தேவயானி, டெல்லி கணேஷின் உடலுக்கு நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.
கார்த்திக்கின் நிலவே முகம்காட்டு, கமல்ஹாசனின் தெனாலி, மம்முட்டி, முரளி, அப்பாஸ் நடித்த ஆனந்தம், சரத்குமார் - நெப்போலியன் நடித்த தென்காசி பட்டணம் உள்ளிட்ட பல படங்களில் நடிகை தேவயானியும், டெல்லி கணேஷும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அதன்பிறகு அவர் டெல்லி கணேஷ் உடன் தனக்கு இருக்கும் பந்தம் பற்றி கண்கலங்கியபடி கூறினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தேவயானி கூறியதாவது:
டெல்லி கணேஷ் சார், ஒரு அருமையான நடிகர். அருமையான மனிதர். ரொம்ப சிம்பிளாக, இயல்பாக தான் இருப்பார். நான் அவருடன் நிறைய படங்கள் நடித்துள்ளேன். தெனாலி, தொடரும், ஆனந்தம், எங்கள் சொந்த படம் திருமதி தமிழ் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன் அவருடன். எல்லா படங்களும் பெரிய பெரிய ஹிட் படங்கள்.
எப்போதுமே நான் அவரை அப்பா.. அப்பானு தான் கூப்பிடுவேன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். என்னுடன் ரொம்ப அழகாக பேசுவார். என்னுடன் நிறைய கதைகள் சொல்லுவார். நாம் அனைவரும் சிறந்த நடிகை மிஸ் செய்ய போகிறோம். ரொம்ப மிஸ் பண்ணுவோம் அவரை. ஏனென்றால் அவர் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த மாதிரியான அருமையான நபர், கலைஞரை நாம் அனைவரும் மிஸ் செய்வோம். நான் ரொம்ப அவரை மிஸ் பண்ணுவேன். அப்பா எங்க இருந்தாலும் நமக்கு ஆசீர்வாதம் கொடுக்கனும். இந்த தலைமுறைக்கு தொடர்ந்து ஆசீர்வாதம் வழங்குவார். அவருடைய பார்வை நம் மீது இருக்கும். அவரது ஆன்மா சாந்தி அடையனும்’’ என்று கண்கலங்கியபடி கூறினார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications