நான் அமைச்சர் என்று கூறி மிரட்டினார்! செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை ஷாக் பிரமாண பத்திரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கில் இன்று அவரின் மனைவி மேகலா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ அதிரடியான வாதங்களை தொடக்கத்தில் இருந்தே வைத்தார். இதனால் அமலாக்கத்துறை தரப்பே அல்லோகலப்பட்டு போனது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த நிலையில் அவரை நீதிமன்ற கஸ்டடியில் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் அவருக்கு செய்யப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சையில் அவரின் இதயத்தில் 90 சதவிகிதம் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட் அனுமதியுடன் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 I am a minister, Senthil Balaji said and talked in an intimate manner says ED in counter affidavit

இந்த நிலையில் இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி என் கணவரை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். அவரின் கைதுக்கான காரணத்தை கூறவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் வரும் 27ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் வைத்துள்ளது.

நாளை மறுநாள் அமலாக்கத்துறை இந்த வழக்கில் வாதம் வைக்க உள்ள நிலையில் இன்று பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 2002 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அமைச்சர் உடனிருந்தார். ஆனால் மனுதாரர் கூறியபடி அந்த நேரத்தில் அவர் காவலில் வைக்கப்படவில்லை.

ஜூன் 13 அன்று ரெய்டு முடிந்ததும் PMLA இன் பிரிவு 50(2) இன் கீழ் அமைச்சருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதலில் கையெழுத்திட்டு சம்மனைப் பெற மறுத்துவிட்டார். எங்களை அவர் மிரட்டும் வகையில் நடந்து கொள்ளத் தொடங்கினார், அவர் மாநிலத்தில் ஒரு அமைச்சர் என்று அதிகாரியிடம் கத்தினார்.

வேறு வழியின்றி, விசாரணை அதிகாரி ஜூன் 14 அன்று இரண்டு சாட்சிகள் முன்னிலையில் அமைச்சரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய முயன்றார், ஆனால் அவர் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை மற்றும் முற்றிலும் ஒத்துழைக்கவில்லை. கடைசி முடிவாக, ED அதிகாரிகள் அமைச்சரைக் கைது செய்ய வேண்டியிருந்தது, இல்லையெனில் அவர் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் PMLA நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அழித்துவிட வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார், என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 I am a minister, Senthil Balaji said and talked in an intimate manner says ED in counter affidavit

வாதங்கள்: முன்னதாக செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ இந்த வழக்கில் அதிரடியான வாதங்களை வைத்தார். இந்த வழக்கில் கைதின் அடிப்படையே தவறு என்று செந்தில் பாலாஜி வாதம் வைத்தார். அதில் செந்தில் பாலாஜி சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அது என்ன சந்தேகம் என்று அவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது போலியான சிகிச்சை என்றால் அதை பற்றி அவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த ஜூன் 14ல், செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அமலாக்கப்பிரிவு தான்.

அவருக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும். அறுவை சிகிச்சைக்கு பின் அவரை விசாரிப்பது முறையல்ல என்ற அமலாக்கப் பிரிவின் முடிவுக்கு நன்றி. இதையும் கூறிவிட்டு பின்னர் அவருக்கு போலியான அறுவை சிகிச்சை கொடுக்கப்பட்டது என்றும் எப்படி கூற முடியும்? செந்தில் பாலாஜி தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தாரே.

2014-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அதன் பிறகே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி செந்தில் பாலாஜி சார்பில் ஆடிட்டர் நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்தார். அதன் பின் ஒரு நாள் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அவர் ஆஜராக மாட்டேன் என்று கூறவில்லையே. செந்தில் பாலாஜியை கைது செய்த போது சட்டவிதிகளை பின்பற்றவில்லை

இயந்திரத்தனமாக நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. காவேரி மருத்துவமனைக்கு மாற்றவும், நீதிமன்ற காவலில் நீடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தெரிந்தே, அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை மீறி காவலில் வைத்து விசாரிக்க கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. ஏற்கனவே நீதிமன்ற காவல் 15 நாட்கள் கொடுக்கப்பட்ட பின் எப்படி அமலாக்கத்துறை காவலில் எடுக்க முடியும்.நீதிமன்ற காவல் 15 நாட்கள் கொடுக்கப்பட்ட பின் எப்படி அமலாக்கத்துறை காவலில் எடுக்க கூடாது. சுனாமியே வந்தாலும் அது நடக்காது. கொரோனாவே மீண்டும் வந்தாலும் அது நடக்க கூடாது. அப்படி இருக்க அமலாக்கத்துறை எப்படி கஸ்டடி எடுக்க முடியும்.

சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே. சட்டத்திலேயே அதற்கு இடம் இல்லையே. பின்னர் எப்படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இதை பல முறை தெளிவுபடுத்தி உள்ளது.

அப்படி இருக்க இவர்கள் எதை வைத்து கஸ்டடி கேட்டனர். இந்த கைதில் சட்ட விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சுங்கத்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு சட்ட விரோத பணமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த பிரிவில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவே முடியாதே.

ஆகவே இது சட்ட விரோதமான கைதுதான். 41 ஏ படி கைது செய்தால் கைது செய்யப்பட்ட நபரிடமும் குடும்பத்தினரிடமும் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கு கைது செய்யவே உரிமை இல்லாத போது,. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று என். ஆர் இளங்கோ வாதம் வைத்துள்ளார்.

இந்த வாதங்களை கேட்ட அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா.. ஆட்கொணர்வு வழக்கிற்கு ஏன் இவ்வளவு வாதம். ஏன் உச்ச நீதிமன்றத்தில் சொன்னதை இங்கேயும் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். இதையடுத்து அவரை பிற்பகலில் வாதம் செய்ய நீதிபதி அழைத்த போது திங்கள் கிழமை வாதம் வைக்கிறேன் என்று அனுமதி கேட்டார். இதையடுத்து ஆட்கொணர்வு மனு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+