”என்னை கைது செய்ய போறாங்க..” போன மாசமே ட்விட்டரில் பதிவிட்ட திருச்சி சிவா மகன்- உதவுவாரா அண்ணாமலை?
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் என்னை கைது செய்வார்கள் என ட்விட்டரில் கடந்த மாதம் பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த மே 8 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

பரபரப்பு ட்வீட்
இந்த நிலையில் கடந்த மாதம் ட்விட்டரில் பதிவு ஒன்றை சூர்யா சிவா வெளியிட்டார். அதில், "24 மணி நேரத்தில் என்னை கைது செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். எனக்கு இது நடக்கும் என்று தெரியும். உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு நன்றி.

ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன
பொய் வழக்குகளை போடுவது திமுகவுக்கு பெரிய விசயம் அல்ல. எதையும் சந்திக்க கூடிய மன நிலையில் தான் நான் இருக்கிறேன் வாருங்கள் வருக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எங்கள் தலைவர் உங்கள் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டு வரலாற்று சிறப்புமிக்க நாளை ஏற்படுத்துவார்." என பதிவிட்டிருந்தார்.

விபத்து தொடர்பான வழக்கில் கைது
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11-ந் தேதி இரவு நடைபெற்ற விபத்து தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் திருச்சி சிவா புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் இந்த வழக்கு தொடர்பாக தன்னை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மிரட்டி வருவதாகவும் தன்னை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்..

சூர்யா சிவா கைது
இந்நிலையில் சூர்யா சிவாவை கைது செய்த திருச்சி போலீசார் கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையிலான கட்சியினர் 20 க்கும் மேற்பட்டோர் கண்டோன்மென்ட் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுனர். இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications