முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி.. எடப்பாடியாருக்கு கமல்ஹாசன் பொளேர் பதிலடி
சென்னை: தமது பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தன் மூலம் அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பார்க்கிறார் என்பது தமக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

அரியலூரில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமல்ஹாசனை கடுமையாக சாடினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

பிக்பாஸ் நடத்தும் கமல்
கமல்ஹாசனுக்கு 70 வயதாகிறது. அவருக்கு என்ன தெரியும்? 70 வயதில் பிக்பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். பிக்பாஸ் நடத்துகிறவர்கள் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்?

குடும்பங்கள் உருப்படாது
வீட்டில் இருக்கும் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது. பிக்பாஸில் என்னங்க இருக்கிறது? அவரு ஒரு கட்சிக்கு தலைவர்னு சொல்லி கேள்வி கேட்கிறீங்க? அவர் எல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக் கூடியவர் அல்ல. நல்லா இருக்கக் கூடிய குடும்பத்தை கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டுப் போகும்; நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டுப் போகும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கமல்ஹாசன் பதில்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்துக்கு 2 ட்விட்டர் பதிவுகள் மூலம் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என முதலில் பதிவு போட்டார் கமல்ஹாசன். அவரது இந்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாக ஷேராகி வருகிறது.

எம்ஜிஆர் பாடல் மூலம் பதில்
மற்றொரு ட்விட்டர் பதிவில் எம்ஜிஆர் பாடல் மூலம் பதில் தந்துள்ளார் கமல்ஹாசன். அப்பதிவில், சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என மேற்கோள்காட்டி இருக்கிறார் கமல்ஹாசன்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications