தெளிவு, தன்னம்பிக்கை.. பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் செம பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஷ் தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    நம்பிக்கைக்குரிய ஐ.ஏ.எஸ்... யார் இந்த பீலா ராஜேஷ்?

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த காலகட்டங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவ்வப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இருப்பினும் கடந்த ஒரு வாரமாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்தான் தினமும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

    I am impressed by the clarity and confidence displayed by TN Health Secretary: P.Chidambaram

    செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் மிகவும் லாவகமாக பதிலளித்து வந்ததை பார்க்க முடிந்தது. எந்த கேள்வி கேட்டாலும் ஒரு வினாடிதான் யோசிப்பார். அதற்கு பிறகு அதற்குரிய பதிலை அவர் தெரிவித்து விடுகிறார்.

    இது முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை மிகவும் கவர்ந்துள்ளது. இதை தனது ட்விட்டர் மூலமாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது! என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

    எதிர்க் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் ப.சிதம்பரம் இவ்வாறு மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

    இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. அது என்னவென்றால் பீலா ராஜேஷ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் என்பவரின் மகள் ஆகும். அவரது குடும்பம் காங்கிரஸ் கட்சி பின்னணி கொண்டது. இதை பல நெட்டிசன்களும் சிதம்பரம் ட்வீட்டில் குறிப்பிட்டு பேசுவதை பார்க்க முடிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+