நான் முக்காடு போடல.. வெயிலுக்கு துப்பட்டாவை தலையில் அணிந்தேன்.. வீடியோவை மறுத்த லதா ரஜினிகாந்த்
பெங்களூர்: நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் தொடர்பான மோசடி வழக்கில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் முக்காடு போட்டு சென்றது விவாதமான நிலையில் அதுபற்றி லதா ரஜினிகாந்த் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் 2014ம் ஆண்டில் வெளியான திரைப்படம் கோச்சடையான். 3 டி வடிவில் வெளியான இந்த திரைப்படத்துக்கு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கதை அமைத்து இருந்தார். ஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், தீபிகா படுகோன், ஆதி, நாசர் உள்பட பல நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் திரையரங்கில் நன்கு ஓடவில்லை. நஷ்டம் ஏற்பட்டது. அதோடு திரைப்படம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது கோச்சடையான் திரைப்படத்தை எடுப்பதற்காக மீடியா ஒன் நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் ஆட் பீரோ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்திடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டதாகவும், குறித்த காலத்தில் அந்த கடனை திரும்ப வழங்கததால் லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2015 முதல் கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. நிபந்தனை முன்ஜாமீன் பெற்றதால் லதா ரஜினிகாந்த் கைது செய்யப்படவில்லை. வழக்கு விசாரணைக்கு அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
இந்நிலையில் தான் முந்தைய வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று லதா ரஜினிகாந்த் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னதாக லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்துக்கு செல்லும்போது தலையில் முக்காடு போட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனை பலரும் விமர்சனம் செய்தனர்.
இதற்கிடையே தான் லதா ரஜினிகாந்த் முக்காடு போட்டு நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வாரண்ட் எதுவும் எனக்கு பிறப்பிக்கப்படவில்லை. நான் மோசடி எதுவும் செய்யவில்லை. நான் செலிப்பிரிட்டியா இருப்பதாக அவர்கள் வன்மத்துடன் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து நான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தேன். நான் தலையில் முக்காடு எல்லாம் போட்டு செல்லவில்லை. வெயில் அடித்ததால் தான் துப்பட்டாவை தலையில் போட்டு அப்படி செய்தேன்'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications