பெருமை.. என்னுடைய பொறுப்புகள் கூடிவிட்டது.. டாக்டர் பட்டம் பெற்ற முதல்வர் பழனிசாமி பேச்சு!
கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் தன்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் தன்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக இன்று பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரியில் நடந்தது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார்.
விழாவிற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பழனியப்பன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

என்ன பேச்சு
இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும்.ஏட்டுக்கல்வி மட்டுமே மாணவர்களுக்கு எப்போதும் உதவாது.

மருத்துவ கல்லூரிகள்
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். விரைவில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இந்த காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அரசு வழங்கும் இலவச லேப்டாப் இதற்கு உதவியாக இருக்கும்.

எப்படி தொலைக்காட்சி
மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வி படிக்கும் வகையில், புதிய தொழிற்கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாம் கல்வியில் புரட்சி செய்துள்ளோம்.

என்ன உயர் கல்வி
மாணவர்கள் இதனால் அதிகமாக உயர் கல்வியில் சேர்கிறார்கள். இதனால் தமிழகம் உயர் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து கல்வி வளர்ச்சி மீதுஅதிமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தின் இந்த வளர்ச்சி எனக்கு பெருமை அளிக்கிறது, என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications