சீமான் பேசுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.. பெரியாரை நேரடியாக எதிர்த்துள்ளார்! ஆடிட்டர் குருமூர்த்தி
சென்னை: சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என்று துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழாவில் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். ஆடிட்டர் குருமூர்த்தி இவ்வாறு பேசும்போது, விழாவில் பங்கேற்று இருந்த ஹெச் ராஜா மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியர் இருவரும் மகிழ்ந்து சிரித்துக் கொண்டு இருந்தனர்.
பெரியார் குறித்த சீமானின் கருத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், துக்ளக் விழாவில் இன்று பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, சீமானை பாராட்டி பேசியுள்ளார். சீமான் நேரடியாக பெரியாரை எதிர்த்து பேசியதற்கு பாராட்டுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று தெரியாது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது. விஜய் வேற அரசியலுக்கு வந்து இருக்கார். ஆனால் உறுதியாக ஒன்று சொல்கிறேன். திமுகவுக்கும், திமுக ஆட்சிக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இதனுடைய தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கத்தான் செய்யும்.
இதற்கு எப்படி எதிர்க்கட்சியினர் வியூகம் வகுக்கப் போகிறார்கள் என்பது தான் முக்கியம். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. இதற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் ஊழல் கட்சி தான். திமுகவும் அதிமுகவும் ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அதிமுக தேசிய விரோத கட்சி கிடையாது. இந்து விரோத கட்சி கிடையாது.
எடப்பாடி தவறவிட்டுட்டார்
அராஜகமான கட்சி கிடையாது. இதனால் அதிமுக மீது ஒரு பற்று இல்லை என்றாலும் கூட ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கிறது. பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் தலைவருக்கு உண்டான போக்கே இல்லை. எல்லா தலைவர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர் தான். அவருடன் பழகியிருக்கிறேன். 2021இல் கையில் வந்த ஒரு வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார்.
பெரியாரை ஏற்றால் பெருமாளை ஏற்க முடியாது.. பெருமாளை ஏற்றால் பெரியாரை ஏற்க முடியாது. ஆனால் இதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் வக்கிரமானவர். கண்ணகியையும் இழிவுபடுத்துவார். பெண்களை இழிவுபடுத்துவார்.. தொல்காப்பியத்தையும் இழிவுபடுத்துவார். திருக்குறளை இழிவுபடுத்துவார்.. இதையெல்லாம் சொல்லியது சோ மட்டும் தான்.
சீமானை பாராட்டுகிறேன்
சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியாரை எதிர்த்து யாரும் கூறக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்னும் செய்ய முடியாது.

ஹெச் ராஜா, தமிழிசை
பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைச்சது சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக் கொண்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு நல்லது. (ஆடிட்டர் குருமூர்த்தி இவ்வாறு பேசும்போது, விழாவில் பங்கேற்று இருந்த ஹெச் ராஜா மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியர் இருவரும் மகிழ்ந்து சிரித்துக் கொண்டு இருந்தனர்)
அம்பேத்கர் என்ன சொன்னார்
அமித்ஷா பேசினார்.. அம்பேத்கர் அம்பேத்கர் என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்களே.. இப்படி சொல்வதற்கு பதில் தெய்வத்தின் பேரை சொன்னால் மோட்சமாவது கிடைக்குமே என்று சொன்னார். ஆனால் அம்பேத்கர் என்ன சொன்னார் தெரியுமா. இந்துத்துவம் என்பது உயர் ஜாதிக்கு மட்டும் சொந்தம் இல்லை.. எங்களுக்கும் சொந்தம்.. இதனை 1927 இல் எழுதினார்.. கூறினார். இந்துத்துவம் என்பது எங்கள் பாரம்பரியம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மறைத்து அம்பேத்கர் இந்துத்துவத்துக்கு எதிரி என்று சொல்லி வருகிறார்கள்.
பிராமணர்களை எதிர்த்ததால் தான் பெரியாருக்கு மதிப்பு இருக்கிறது. பிராமணர்கள் இல்லை என்றால் பெரியாருக்கு இந்த மரியாதை இருந்திருக்காது. தமிழகத்தில் இந்த உண்மைகள் எல்லாம் வெளிய வரனும். தமிழகத்தில் இப்போது கருத்து சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் உடைந்துகொண்டு இருக்கிறது. நாம் எல்லோரும் செய்ய வேண்டியது ஒன்று தான். இதுபற்றி சோஷியல் மீடியாவில் பரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications