தமிழ்நாட்டை உபியுடன் ஒப்பிடவில்லை.. விஜய்யுடன் பேசியது உண்மை.. பிரவீன் சக்கரவர்த்தி
சென்னை: அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தை, வாக்குவாதங்கள் நடைபெற தொடங்கிவிட்டன. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் வரத்தொடங்கியுள்ளன. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து பேசியிருந்தது சர்ச்சையாகியிருந்தது. இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டின் நிதிநிலையை உபியுடன் ஒப்பிடவில்லை. விஜய்யை சந்தித்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. பலம் வாய்ந்த கூட்டணி என்று கருதப்பட்ட திமுக கூட்டணியில் சமீபகாலமாக பிரச்சனைகள் வெடிக்க தொடங்கியுள்ளது. தவெகவுடன் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பேச தொடங்கியுள்ளனர். ஐபிடிஸ் சர்வேயை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சொன்ன கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

திமுக - காங்கிரஸ் பிரச்சனை
இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல காங்கிரஸ் சார்பிலும் திமுகவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "மாணிக்கம் தாகூர் சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து. திமுகவை தவிர வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை" என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் ஆரம்பம் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தான். தமிழ்நாடு நிதிநிலையை, உத்தரப்பிரதேசம் மாநிலத்துடன் ஒப்பிட்டு, மிகவும் அபாய நிலையில் இருப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தும் அவர் பேசியிருந்தார். அது திமுக . காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
உபியுடன் ஒப்பிடவில்லை
இந்நிலையில் கோவை செல்வதற்காக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் அங்கு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில், "சர்ச்சை எல்லாம் எதுவுமில்லை தமிழக நிதிநிலையை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடவில்லை. தமிழ்நாட்டின் கடன் சூழ்நிலை குறித்து ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சொன்னதை மட்டுமே மேற்கோள் காட்டினேன். அவ்வளவுதான்.
விஜய் சந்திப்பு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும்" என்று கூறினார். அப்போது தவெக தலைவர் விஜய்யுடன் சந்திப்பு நடைபெற்றதா, சந்திப்பின்போது என்ன விஷயங்கள் பேசப்பட்டன, மீண்டும் விஜய்யை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பிரவீன் சக்ரவர்த்தி, "விஜய்யை சந்தித்து பேசியது உண்மை தான். இது மட்டும் தான் சொல்ல முடியும்" என்று கூறி சென்றார்.
-
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications