ஐ டோண்ட் கேர்.. போறதுன்னா போங்க.. காங்கிரஸிடம் எகிறிய விஜய்.. பதறி வந்து சமாதானம் செய்த தாக்கூர்!
சென்னை: முதல்வர் விஜய்யை சமாதானப்படுத்தியுள்ளது காங்கிரஸ் தலைமை என்பது தான் தவெக-காங்கிரஸ் கூட்டணியின் ஹாட் டாபிக் !
பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி வருகிறார்கள் தவெக அமைச்சர்கள். இந்தியா டுடே கருத்துக்கணிப்புக்கு பிறகு, வேட்பாளர் என்பதைத் தாண்டி வருங்கால பிரதமர் என்றே விஜய்யை சொல்லி வருகின்றனர். இதனால் தேசிய அளவிலும் விஜய் பிம்பம் கட்டமைக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தும் சூழலில், காங்கிரஸ் தலைமை இதனை ரசிக்கவில்லை.

குறிப்பாக, ராகுல் பிரதமராக தவெக துணை நிற்கும் என்று ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தபோது விஜய்யே உறுதி தந்திருந்தார். அது மட்டுமல்லாமல், முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போது அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ராகுல்காந்தியிடம் மனம் திறந்து பேசினார் விஜய். அந்த மனம் திறந்தலில், 2029-ல் நீங்கள் தான் தான் பிரதமர். உங்களை பிரதமராக்குவதில் எங்களின் பங்கு அதிகமிருக்கும் என்றும் உறுதி தந்ததார். கான்ஃபிடன்டாக இருங்குங்கள்... திமுகவை வீட்டுக்கு அனுப்பியது மாதிரி, பாஜகவையும் வீட்டுக்கு அனுப்பிடலாம்... கான்ஃஃபிடண்டாக இருங்கள் என்று தனக்கே உரிய பாணியில் ராகுலுக்கு நம்பிக்கைக் கொடுத்திருந்தார் விஜய்.
ஆனால், ஆட்சி அதிகாரத்தின் ருசி அறிந்தப்பிறகு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த விஜய்யும் அவரது நிழல்களும், ஆட்சியை நிலையாக கொண்டு செல்லவேண்டுமானால் மத்திய அரசின் ஆதரவும் அரவணைப்பும் இருக்க வேண்டும் என புரிந்து கொண்டு அரசியல் காய்களை நகர்த்தினர். அந்த ஒரு கட்டம்தான் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க விஜய் மறுப்பதும், இந்தியா கூட்டணியில் இணைய விஜய் மறுப்பதும். ராகுலை சீண்டினால் மத்திய பாஜக தங்களிடம் அணிசரணையாக இருக்கும் என எதிர்பார்த்தே, சீண்டி வருகிறது விஜய் தரப்பு. இதையெல்லாம் எங்கள் தலைமை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் பலரும், பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி உருவாக்கும் செய்திகளை ரசிக்கவில்லை.
அதனால் தான், காங்கிரஸை சீண்டி பார்க்க விஜய் தரப்பு கட்டமைக்கும் அரசியலுக்கு பதிலடித்தர, தமிழக காங்கிரஸ்சுக்கு உத்தரவிட்டது. அதன்படி, குட்டி கதைச் சொல்லி விஜய்யை வம்புக்கு இழுத்தார் தமிழக தலைவர் மானிக்கம் தாக்கூர். இதற்கு ஒரு படி மேலே போய், ராகுலை பிரதமராக ஏற்க மறுத்தால், அமைச்சரவையிலிருந்து காங்கிரஸ் விலகும் என எச்சரித்தார் தவெக அமைச்சரவையில் இருக்கும் காங்கிரஸ் ராஜேஷ்குமார். இதன் அர்த்தம் என்ன வெனில், விஜய் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெறும் என்கிற மறைமுக சமிக்ஜைதான்.
இப்படி எச்சரித்தால் காங்கிரசை சமாதானப்படுத்த விஜய் முயற்சிப்பார் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இதற்கு மாறாக, விஜய்யின் ஆக்சன் வேறு மாதிரி இருந்ததால் அவசரம் அவசரமாக விஜய் யை சந்தித்து சமாதானப்படுத்துங்கள் என மானிக்கம் தாக்கூரிடமும், ப்ரவீன் சக்கரவர்த்தியிடமும் எங்கள் தலைமை அறிவுறுத்தியது. அதன்படி சமாதானப்படுத்தியுள்ளனர் என்கிறார்கள் விபரமறிந்த தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.
எதற்காக விஜய்யை சமாதானப்படுத்தினார்கள் ? என்று விசாரித்த போது, அமைச்சர் ராஜேஸ்குமாரின் எச்சரிக்கையை அறிந்து மூட் அவுட் டானார் முதலவர் விஜய். கேபினெட்டிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். ஏன், எனக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் வாங்குவதாக இருந்தாலும் வாங்கிக்கொள்ளட்டும். ஐ டோண்ட் கேர். ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். இதை காங்கிரஸ் தலைமைக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க என தனது தனிச்செயலாளர் ஜெகதீஸ் பழனிச்சாமியிடம் தெரிவித்தார் விஜய்.
உடனே அவரும், காங்கிரஸ் ப்ரவீன் சக்கரவத்தியை தொடர்புகொண்டு, விஜய் சொன்னதை விவரித்தார். பதறிப்போன ப்ரவீன், நான் பார்த்துக்கி றேன். முதல்வரை மூட் அவுட் ஆக வேண்டாம் என சொல்லுங்கள் என்று கூல் படுத்திவிட்டு, ராகுலை தொடர்புகொள்ள முயற்சித்தார் ப்ரவீன். லைன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து கே.சி.வேணுகோபாலை தொடர்பு கொண்டு விஜய் கூறியதை ப்ரவீன் எடுத்துச் சொல்ல, அவரோ, நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லி தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து, ப்ரவீன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்ட வேணுகோபால், அமைச்சர்கள் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். காங்கிரசும் அப்பப்போ அரசியல் செய்தாக வேண்டும் தானே... விஜய் மீது தனக்குள்ள மரியாதையும் நட்பும் எப்போதும் மாறாது என ராகுல்காந்தி சொல்லியிருக்கிறார். இதனை விஜய்யை சந்தித்து தெரிவியுங்கள். தேவைப்பட்டால், விஜய்யை சந்திக்கும் போது எனக்கு ஃபோன் போட்டுக் கொடுங்கள்.
நான் பேசிக் கொள்கிறேன் என்று சொல்ல, மாணிக்கம் தாக்கூரை அழைத்துக்கொண்டு விஜய்யை சந்தித்தார் ப்ரவீன் சக்கரவர்த்தி. ராகுலின் எண்ணத்தை விஜய்யிடம் விவரித்தார்கள். அது மட்டுமல்ல , அங்கிருந்தபடியே, வேணுகோபாலுக்கு லைன் போட்டு விஜய் யிடம் கொடுத்துள்ளனர். விஜய்யிடம் பேசிய வேணுகோபால், அவரை சமாதா னப்படுத்தியிருக்கிறார் என்று தெரிவிக்கிறார்கள் தவெகவின் மேலிடத் திற்கு நெருக்கமான தரப்பினர்.
ஆனால், விஜய்யை சாமாதனப்படுத்தியிருந்தாலும் ராகுல்காந்திக்கு எதிரான தவெகவின் அரசியலை இப்போதும் எங்களால் மறக்க முடியாது. இந்த சமாதானம் தற்காலிகமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
