‛மன்னிப்பு கேட்க முடியாது’.. அண்ணாமலையிடம் ரூ.2 கோடி கேட்டு ஆர்எஸ் பாரதி நோட்டீஸ்! முற்றும் மோதல்
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஆர்எஸ் பாரதி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு ஆர்எஸ் பாரதி அனுப்பிய பதில் நோட்டீசில் ‛‛மன்னிப்பு கோர முடியாது'' எனக்கூறி உள்ளதோடு அவரிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் முற்றுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஏராளமானவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதில் 200க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 61 பேர் வரை பலியாகினர். அதிர்ஷ்டவசமாக மற்றவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
அதாவது கள்ளச்சாராய பலி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து அதிமுக, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் புதுக்கோட்டையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, பத்திரிகையாளர் சந்திப்பில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விஷயத்தில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. விக்கிரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு எழுந்திருக்கிறது'' என தெரிவித்தார்.
ஆர்எஸ் பாரதியின் இந்த கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை சார்பில் அவரது வழக்கறிஞர் பால்கனகராஜ் சார்பில் ஆர்எஸ்பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ‛‛ உண்மைக்கு புறம்பான, தவறான கருத்துக்களைக் கூறி, மக்கள் மத்தியில் அண்ணாமலையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நோட்டீசுக்கு திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛‛மன்னிப்பு கோர முடியாது. இழப்பீடும் தர முடியாது. வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மாறாக திமுக பற்றிய உங்களின் கருத்துக்கு மன்னிப்பு மற்றும் இழப்பீடாக ரூ.2 கோடி தர வேண்டும். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திமுகவை தொடர்புப்படுத்தியதற்கான நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.2 கோடியை இழப்பீடாக முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?









Click it and Unblock the Notifications