Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரோகத்தால் வீழ்ந்தேன்! சிறுநீரகம்தான் பிரச்சினை: பவர் ஸ்டார் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட நம்பிக்கை துரோகங்கள்தான் தனது உடல்நிலையைப் பாதித்துவிட்டதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்தளவுக்கு தன் படங்களை விளம்பரப்படுத்துவதற்காகப் பணத்தை அள்ளி இறைத்தவர். அதனால் அவருக்கு ஒருவிதமான புகழ் வெளிச்சம் கிடைத்தது. பின்னர் அவர் விசிகவில் இணைந்தார். அப்போது அவருக்கு திருமாவளவன் 'பவர் ஸ்டார்' என்று பட்டம் கொடுத்தார். ஒரு பக்கம் சினிமா மற்றொரு பக்கம் அரசியல் என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்த சீனிவாசன் இன்று சிறுநீரகக் கோளாறு காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Power Star Srinivasan Guindy GH

பொருளாதார ரீதியில் பெரிய இடத்திலிருந்தவர் அரசு மருத்துவமனைக்கு வந்தது ஏன்? அவரது நிலை எப்படி இருக்கிறது? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் தனது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பேசி இருக்கிறார் சீனிவாசன். அவருக்கு என்ன ஆனது? அவர் எப்படி இருக்கிறார் இப்போது?

சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், "மருத்துவர்கள் எல்லா பரிசோதனைகளையும் செய்திருக்கிறார்கள். எனக்குச் சிறுநீரக பாதிப்பு இருக்கிறது. இன்றுதான் டெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். அதன்பின்னர் தான் சிகிச்சை பற்றி முடிவு செய்வார்கள். அரசாங்க மருத்துவமனையா? தனியார் மருத்துவமனையா? என்பது முக்கியம் இல்லை. எங்கே நல்ல சிகிச்சை கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். இந்தக் கிண்டி மருத்துவமனையில் வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது.

உடல்நிலை மோசமாக எல்லாம் இல்லை. கிட்னியில் பிரச்சினைக்கான அறிகுறிகள் தெரிந்தன. பெரிய அளவில் பாதிப்பு வருவதற்கு முன்பே நல்ல சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்று எச்சரிக்கையாக வந்தேன். மருத்துவர்களும் மருத்துவமனையில் சேரச் சொன்னார்கள். ஆகவே, உடனே அனுமதிக்கப்பட்டேன்.

இப்போதைக்கு எனக்குப் பொருளாதார அளவில் பலம் குறைவாக இருக்கிறது. சிலர் ஏமாற்றிவிட்டார்கள். சிலர் செய்த துரோகங்கள் இருக்கின்றன. எனக்குப் பெரிய கடன்கள் இல்லை. ஆனால், நம்பி நிறைய ஏமாந்துவிட்டேன். நம்பிக்கை துரோகங்கள் அதிகம். அதனால் இந்த நிலைக்கு வந்துவிட்டேன். எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் ரசிகர்கள் என்னை எப்போதும் கைவிட மாட்டார்கள். ஊடகங்கள் நான் மருத்துவமனையில் சேர்ந்தது முதல் நல்ல ஆதரவு தருகிறார்கள். நான் மீண்டு வருவேன். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் வரலாம். அதற்காகக் கவலைப்படக் கூடாது. நானும் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளமாட்டேன். உற்சாகமாகவே இருப்பேன்.

Power Star Srinivasan Guindy GH

கோடிக் கணக்கான பணம் உள்ளது என்பதற்காக தனியார் மருத்துவமனைக்குச் செல்லவும் மாட்டேன். பணம் இல்லை என்பதற்காக அரசு மருத்துவமனைக்கு வரவும் மாட்டேன். எங்கே நல்ல சிகிச்சை இருக்கிறதோ அங்கே போகவேண்டும். இன்றைக்கு அரசு மருத்துவமனையின் தரம் பல மடங்கு உயர்ந்துவிட்டது. தரமான மருத்துவர்கள் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனை என்றால் தரம் இருக்காது என நினைப்பது தவறு. அது எல்லாம் அந்தக் காலம். இப்போது எவ்வளவோ முன்னேறிவிட்டது.

தரமான மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்கள். அதனால்தான் கிண்டி மருத்துவமனையில் வந்து சேர்ந்தேன். மருத்துவர்கள் நல்ல முறையில் பார்த்து வருகிறார்கள். முன்கூட்டியே நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிந்துவிட்டனர். விட்டிருந்தால் சிறுநீரக பாதிப்பு வந்திருக்கும். இதற்கு முன்பே நான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். நான் நமக்கு என்ன ஆகப்போகிறது? என்ற அலட்சியத்திலிருந்துவிட்டேன். உப்பு 50% குறைக்கச் சொல்லிவிட்டார்கள். கொஞ்சக் காலத்திற்கு அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது. மாத்திரைகளைச் சரியாக உட்கொள்ள வேண்டும். இப்படி சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள். மீண்டு வந்துவிடுவேன்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+