எனது பெயரில் சேனல் தொடங்க போகிறேன்.. ரஜினிகாந்த் அறிவிப்பு.. சொன்ன காரணத்தை பாருங்க!
நடிகர் ரஜினிகாந்த் தனது பெயரில் புதிய டிவி சேனல் தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது பெயரில் புதிய டிவி சேனல் தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்து இந்த வருடம் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் வருடம் முடிய இன்னும் ஒரே வாரம்தான் உள்ளது.
இதுவரை அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக தற்போது புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கி போவதாக தெரிவித்துள்ளார்.

தகவல்கள் வந்தது
நடிகர் ரஜினிகாந்த் சேனல் ஒன்று தொடங்க போவதாக கடந்த வாரம் தகவல் வந்தது. இதற்காக அவர் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது. ஆனால் அந்த செய்தி உண்மையானதுதான் என்று ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த செய்திகளுக்கு தற்போது ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

பேட்டி
நேற்று ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது பெயரில் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க உள்ளோம். அதற்காக பதிவு செய்து இருக்கிறோம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.

காரணம்
எனது பெயரில் யாரோ தொலைக்காட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியானது. அதன் காரணமாக முன்கூட்டியே எனது பெயரை பதிவு செய்தேன். இனி வரும் நாட்களில் தொலைக்காட்சி குறித்து தெரிவிக்கப்படும்.

கூட்டணி என்ன
இன்னும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் பல நாட்கள் உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம், என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications