அபிராமியை சந்திக்கவே இல்லை.. "குழந்தைகளுடன்" நான் தனியாகத்தான் இருக்கிறேன்.. கணவர் விஜய் கண்ணீர்
Recommended Video

சென்னை: அபிராமியை நான் சந்திக்கவே இல்லை. குழந்தைகளின் நினைவாக நான் தனியாகத்தான் இருக்கிறேன் என கணவர் விஜய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கமலின் குணா திரைப்படத்திற்கு பிறகு அபிராமி என்ற பெயர் பிரசித்தி பெற்றது என்றால் அதற்கு குன்றத்தூர் அபிராமிதான் காரணம். குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவிதான் அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அபிராமிக்கு பிரியாணி சாப்பிடும் பழக்கம் இருந்தது. இதனால் கடை கடையாக போய் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் ஒரு நாள் குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடையில் சாப்பிட செல்லும் போது அங்குள்ள கேஷியருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

இரு முறை ஜாமீன்
இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தான் பெற்ற இரு குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் தப்பி செல்ல முயற்சித்த அபிராமியையும் சுந்தரத்தையும் போலீஸார் கைது செய்தனர். சுமார் 90 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள அபிராமி ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருமுறை ஜாமீன் கோரினார்.

அபிராமி
ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. சிறையில் இருக்கும் தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை என மனஉளைச்சலில் அபிராமி இருப்பதாக சிறை துறையினர் கூறினர்.

பெற்றோருடன் தங்கிய விஜய்
இதுகுறித்து கணவர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அவர் ஜெயிலுக்கு போனது முதல் நான் அவரை சென்று சந்திக்கவே இல்லை. குழந்தைகள் இறந்த சமயத்தில் மட்டும் அவருடைய பெற்றோருடன் தங்கியிருந்தேன்.

குழந்தைகள் நினைவுகள்
அதன்பிறகு நான் தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவோடு வாழ்ந்து வருகிறேன் என்று கண்ணீர் மல்க விஜய் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications