அரசியல் நிலைப்பாட்டை கூறினேன்.. இனி விஜயகாந்த்தான் முடிவெடுக்க வேண்டும்.. சரத்குமார் சூசக பேட்டி!
எனது தேர்தல் நிலைப்பாட்டை கூறினேன், முடிவு எடுப்பது இனி விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எனது தேர்தல் நிலைப்பாட்டை கூறினேன், முடிவு எடுப்பது இனி விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரன்று சந்திப்பு நடத்தி இருக்கிறார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் சென்று சரத்குமார் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பிற்கு பின் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். சந்திப்பு குறித்து அவர் விளக்கம் அளித்தார்.

பெரிய மகிழ்ச்சி
சரத்குமார் தனது பேட்டியில், விஜயகாந்த் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயகாந்த் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த போது, அமெரிக்காவிலேயே சென்று சந்திக்க விரும்பினேன். விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தேன்.

நல்ல நலம்
விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடும் அளவிற்கு வலிமையாக உள்ளார். அவரை விரைவில் தேர்தல் மேடைகளில் பார்க்க முடியும். அவர் தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார்.

அரசியல் பேசினோம்
அதே சமயம் நாங்கள் இருவரும் அரசியலும் பேசினோம். அரசியல் குறித்து எனது கருத்தை விஜயகாந்திடம் கூறினேன். ஒரே கருத்துள்ள கட்சிகள் இந்த தேர்தலில் ஒன்றாக கூட்டணி வைக்கும்.

கூட்டணி முடிவு
கூட்டணி குறித்து முடிவு எடுப்பது விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறது. மார்ச் 5ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும், என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications