சென்னையின் “வைப்” இருக்கே.. மனம் திறந்த பிரதமர் மோடி! தமிழ் மக்கள் மொழி, கலாச்சாரத்தை பிடிக்குமாம்
சென்னை: தமிழ் மக்கள், மொழி, கலாச்சாரத்தை தான் நேசிப்பதாகவும், சென்னை வைப் தனக்கு பிடிக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி உள்ளார். சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி இவ்வாறு பேசி உள்ளார்.
இன்று சென்னை வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையோரம் அமைந்து இருக்கும் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அந்த விழாவில் பிரதமர் மோடிக்கு விவேகானந்தர் சிலை பரிசாக அளிக்கப்பட்டது.
தமிழை பிடிக்கும்: அதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "ராமகிருஷ்ண மடம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனது வாழ்க்கையில் அது முக்கிய பங்காற்றி உள்ளது. சென்னையில் இந்த நிறுவனம் தனது 125 வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்த நிறுவனம் எனது மகிழ்ச்சிக்கு உதவியது. நான் தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்து இருப்பவன். நான் தமிழ் மொழியை விரும்புகிறேன். தமிழ் கலாச்சாரத்தையும் நேசிக்கிறேன். சென்னையின் வைபும் எனக்கு பிடிக்கும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள பிணைப்பை காசி தமிழ் சங்கமும் உணர்த்துகிறது. ராமகிருஷ்ண மடம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

விவேகானந்தருக்கு புகழாரம்: நவீன தொழில்நுட்பங்களின் மூலமாக ராமகிருஷ்ண மடம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. பெண்கள் தங்கள் மீதான தடைகளை உடைத்து எறிந்துகொண்டு வருகிறார்கள். இன்று நான் விவேகானந்தர் இல்லத்திற்கு வரும் வாய்ப்பை பெற்று இருக்கிறேன். சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கி இருந்தார். தியானம் செய்தார். கன்னியாகுமரி உள்ள புனித பாறையில் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடித்தார். அவர் சிகாகோவில் இருந்து அவர் நாடு திரும்பியபோது அவர் முதலில் கால் வைத்தது புனித பூமியான தமிழ்நாட்டில்தான். ராமநாதபுரம் ராஜா அவரை பெரிய மரியாதையுடன் வரவேற்றார்.












Click it and Unblock the Notifications