பாஜகவில் சேருங்கன்னு எல். முருகன் அழைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.. மெல்ல மாறும் மு.க. அழகிரி குரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் சேர வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

    சென்னை: வந்தால் ஓகே… ஆனா முடிவே எடுக்கல.. அழகிரியை வைத்து பாஜகவின் ‘ஆடுபுலி’ ஆட்டம்..!

    தமிழக அரசியலில் திடீரென கடந்த சில நாட்களாக மு.க. அழகிரியை மையமாக வைத்து செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மு.க. அழகிரியும் திட்டவட்டமாக எந்த ஒரு பதிலையும் வெளிப்படுத்தவில்லை.

    Im happy on TN BJP chief L Murugans call to join party, Says MK Azhagiri

    அதேநேரத்தில் ஆலோசனை நடத்தி தகவல் சொல்கிறோம் என்ற ரேஞ்சில்தான் அழகிரியின் பதில்கள் இருந்தன. இந்த நிலையில் மு.க. அழகிரி, பாஜகவில் சேர்ந்தால் வரவேற்போம் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.

    இந்த அழைப்பு குறித்து முதலில் பேட்டி அளித்த அழகிரி, ஆலோசனை நடத்திவிட்டு சொல்கிறேன் என முதலில் கூறினார். ஆனால் ஏ.என்.ஐ. நிறுவனத்துக்கு பேட்டியளித்த அழகிரி, எல். முருகனின் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    மேலும் இதுவரை பாஜகவில் சேருவது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. என்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு விரைவில் முடிவை அறிவிக்க இருக்கிறேன். வரும் 21-ந் தேதியன்று எந்த ஒரு அரசியல் முக்கியத்துவமான சந்திப்பும் இல்லை எனவும் அழகிரி கூறியுள்ளார். அதாவது சென்னையில் நவம்பர் 21-ல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தாம் சந்திக்க போவதில்லை என்பதையே அழகிரி இப்படி கூறியிருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+