Thug life: சிவண்ணா குறித்து கமல் சொன்ன வார்த்தை! "ரொம்ப கஷ்டமாக இருக்கு, ஆனா.." கன்னட மொழி சர்ச்சைக்கு விளக்கம்
சென்னை: கன்னட மொழி குறித்து கமல்ஹாசனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். மேலும், கமல்ஹாசன் தனது அறிக்கையில் பிரபல கன்னட நடிகரான சிவராஜ் குமார் குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடந்த தக் லைப் (Thug life) இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், "தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ் குமார்) ஒப்புக் கொள்வார் என்றே நினைக்கிறேன்" என கூறியிருந்தார். கமலின் பேச்சுக்குப் பல கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

கமல் அறிக்கை
கன்னட அமைப்புகளுக்கு ஆதரவாகக் கன்னட பிலிம் சாம்பரும் களத்தில் இறங்கியது. தக் லைப் படத்திற்குத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இதற்கிடையே கமல் தனது பேச்சுக்கு விளக்கமளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். மேலும், கமல்ஹாசன் தனது அறிக்கையில் பிரபல கன்னட நடிகரான சிவராஜ் குமார் குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
பாசத்தில் சொன்ன வார்த்தைகள்
அதில் கமல், "தக் லைஃப் ஆடியோ விழாவில் டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவராஜ் குமார் மீதான உண்மையான பாசத்துடன் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. எனது கருத்துகள் வேறு விதமாகப் பரப்பப்படுவது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிடவே அந்த கருத்துகளைக் கூறினேன்.. கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது எனது நோக்கம் இல்லை.. கன்னட மொழியின் பாரம்பரியம் குறித்து கேள்வி எழுப்புவது எனது நோக்கம் இல்லை.
எனக்குத் தெரிந்தது சினிமா மொழி.. அதைத் தான் நான் பேசுகிறேன். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு சர்வதேச மொழி. நம் அனைவருக்கும் இடையேயான பிணைப்பையும் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டவே அப்படி பேசியிருந்தேன். எனது சீனியர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த அன்பையும் பிணைப்பையும்தான் நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
சிவண்ணா
அன்பின் வெளிப்பாடாகவே ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் சிவண்ணா கலந்து கொண்டார். இதனால் சிவண்ணா இவ்வளவு சங்கடத்தைச் சந்திக்க வேண்டி இருப்பதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் எங்கள் இருவருக்கும் இடையேயான உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் தக் லைப் விழாவில் கன்னட மொழி குறித்துப் பேசும்போது சிவராஜ் குமாரும் அங்கு இருந்தார். கமல் பேசுவது சரி என்பது போல அவர் தலையை அசைத்ததாகவும் கூறப்படுகிறது. கமலின் பேச்சுக்கு சிவராஜ் குமார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூட பல கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
சிவராஜ் குமார்
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதும் சிவராஜ் குமார் இது குறித்து கமலுக்கு ஆதரவாகவே பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிவராஜ் குமார், "கன்னட மொழி குறித்து கமல் ஹாசன் ரொம்ப நன்றாக பேசினார். பெங்களூருக்கு அதிக மதிப்பு கொடுத்துப் பேசினார். நான் அவரை பார்த்து வளர்ந்தவன். இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கத்தை 100 சதவீதம் கமல் கொடுப்பார் என நம்புகிறேன்" என்று கமலுக்கு ஆதரவாகவே பேசியிருந்தார்.
அப்போதும் சிவராஜ் குமாரின் கருத்துகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்தச் சூழலில் கமல்ஹாசன் தனது பேச்சு குறித்து விளக்கமளிக்கும் வகையில் கர்நாடக பிலிம் சாம்பருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் சிவராஜ் குமார் குறித்தும் தன்னால் சிவராஜ் குமார் சங்கடத்தை எதிர்கொள்வது வருத்தமளிப்பதாகவும் கூறியிருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications