மீண்டும் வருவேன்.. மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன்: விஜயகாந்த் பேச்சு-தேமுதிகவினர் உற்சாகம்
சென்னை: தாம் மீண்டும் வருவேன். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் வருவேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வென்ற அக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:

எங்களது திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணினோம். எங்களுக்கு தொண்டர்கள்தான் குடும்பம். அதனால் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
தேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிறது. அதற்காக குட்ட குட்ட குனிகிற ஜாதி அல்ல நாங்கள்.. மீண்டும் நாங்கள் எழுவோம். 2021 சட்டசபை தேர்தலுக்காக கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்வோம்.
விஜயகாந்த் தமிழகம் முழுவதும் மீண்டும் பிரசாரம் செய்வார். 2021-ல் தேமுதிக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமைப்பதுதான் நமது நோக்கம். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும் வரை நாம் ஓயமாட்டோம்.
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோமா? அல்லது தனியாக தேர்தலை சந்திப்போமா? என்பதை தலைவர் விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
பின்னர் பேசிய விஜயகாந்த், மீண்டும் நான் வருவேன்; மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் நான் வருவேன் என்றார். அவரது இந்த பேச்சு தேமுதிகவினரை உற்சாகப்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications