உங்கள் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.. ''திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றாமல் ஓயப்போவதில்லை'' - சசிகலா
சென்னை: மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் தி.மு.க. கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றாமல் ஓய மாட்டேன் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வி கே சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று விவசாயிகளின் நிலைமையோ மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. திமுக அரசின் வரலாறு காணாத சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெறும் கட்டிடம் மட்டும் இருப்பது
தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராட வேண்டியிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் இல்லாமல் வெறும் கட்டிடம் மட்டும் இருப்பது கவலை அளிக்கிறது. எனவே எல்லா நேரமும் அங்கு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் இருக்க தேவையான நடவடிக்கையினை தி.மு.க. அரசு உடனே எடுக்க வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால் மக்கள் துன்பப்படுவதை தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.

திமுகவுக்கு ஓட்டு போட்டதற்காக சாக்கடை நீரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 23 மற்றும் 27-வது பகுதிகளான செல்லூர் கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் அமைகும் பணி மந்தகதியில் நடந்து வருவதால் தோண்டிய பள்ளங்களில் மக்கள் தவறி விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இப்பகுதியில் குடிநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வருவதால் மக்கள் சாலை மறியல் செய்து போராடி வருகின்றனர். திமுகவிற்கு ஓட்டு போட்டதற்காக சாக்கடை நீரை குடிக்க வேண்டி அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடங்களை கட்டுப்படுத்தி..
அதபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை சுற்றி மழையால் வெள்ள நீர் சூழ்ந்து நோயாளிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்த ஆட்சியாளர்கள் இதை சரி செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் வெதனையாக் இருக்கிறது. இவ்வாறு மக்கள் துன்பப்படுவதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக இரண்டு நாட்களக தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடங்களை கட்டுப்படுத்தி பார்த்துக்கொள்வதுதான் இன்றைய திமுக ஆட்சியாளர்களின் பிரதான வேலையாக இருக்கிறது.

மக்களை எப்படி காப்பாற்றுவது
இது போன்ற திமுகவினரின் சதித்திட்டங்கள் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பததையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லையா? அல்லது எப்படி வேலை செய்வது என்பது தெரியவில்லையா? என்று எண்ணத் தோன்றுகிறது. விதி வசத்தால் ஆட்சியை பிடித்தவர்களுக்கு ஓட்டு போட்ட மக்களை எப்படி காப்பாற்றுவது என்று துளிக் கூட சிந்தனை இல்லை.

அவலநிலைகளை எவ்வாறு மூடி மறைப்பது
திமுகவினருக்கு இப்போது இருக்கும் ஒரே பயம் என்னவென்றால் எதிர்க்கட்சியினர் யாரும் தங்களை எந்த கேள்வியும் கேட்டுவிட கூடாது என்பது தான். இன்றைய ஆட்சியின் அவலநிலைகளை எவ்வாறு மூடி மறைப்பது என்று மட்டும் நினைக்கிறார்கள். ஆனால் நானோ மக்கள் பிரச்சினைகளுக்க்கு தீர்வு காணும் எண்ணத்தில் எனது பேட்டிகள் மற்றும் அறிக்கையின் வாயிலாக மக்களை நேரில் சந்திக்கும் வேலையிலும், இந்த ஆட்சியாளர்கள் பார்த்து தொடர்ந்து கேள்விகளை கேட்பதால் என் மேல் வீண் பழி சுமற்றி எப்படியாவது எனது வாயை அடைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.

நான் ஓயப்போவதில்லை
திமுகவினரின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. நான் புட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் வந்துள்ளேன். திமுக தலைமயினான ஆட்சியின் மக்கள் விரொத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் நான் ஓயப்போவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
-
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications