அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சிக்கின்றனர்! முதல்முறையாக மௌனம் கலைத்த எடப்பாடி! பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சி செய்வதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
மோதல்.. குற்றச்சாட்டு.. பழிவாங்கல்.. மீட்டிங்குகள் என்று அதிமுக உட்கட்சி பூசல் உச்சம் தொட்டுள்ளது. எடப்பாடி டீம் - ஓபிஎஸ் டீம் என்று அதிமுக இரண்டாக மீண்டும் உடைந்து மோதலில் குதித்து உள்ளது.
நாளை மறுநாள் அதிமுக பொதுக்கூட்டம் நடக்க உள்ள நிலையில் உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. ஒற்றை தலைமையை எப்படியாவது அடைய வேண்டும் என்று எடப்பாடி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். இதை தடுக்க ஓபிஎஸ் தீவிர மீட்டிங்குகளை நடத்தி வருகிறார்

கடிதம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்ச்செல்வம் சார்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் இந்த முறையும் அனுமதி அளிக்க வேண்டும்.

கூட்டம் ஒத்திவைப்பு?
இடம் இல்லை என்று பேச கூடாது. அதோடு, ஒற்றை தலைமை குறித்து தேவையின்றி பேச கூடாது. அந்த கருத்துக்களால் நிர்வாகிகள் பலர் கொதித்து போய் உள்ளனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என்று ஓபிஎஸ் பரிந்துரை செய்துள்ளார். அவரின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொன்னார்?
இரண்டு நாட்களுக்கு முன் செய்தியாள்களை சந்தித்த போது ஓபிஎஸ் வெளிப்படையாக ஒற்றை தலைமையை எதிர்த்து இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த மோதல்களுக்கு இடையில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக மௌனம் கலைத்து இருக்கிறார். அதிமுக ஐடி விங் மீட்டிங் ஒன்றில் அவர் நேற்று இரவு உட்கட்சி பூசல் பற்றி வெளிப்படையாக பேசினார்.

சூழ்ச்சி
அதிமுகவை வீழ்த்த சிலர் முயற்சி செய்வதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருக்கிறார். மேலும், அதிமுக வீழ்ந்ததாக சரித்திரமே இல்லை. கட்சியை நாம் காப்பாற்றுவோம். அதிமுகவை வீழ்த்தும் முயற்சிகளை முறியடிப்பேன். உங்கள் துணை கொண்டு அதிமுகவை பாதுகாக்க பாடுபடுவேன். அதிமுகவின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications