நாடு முழுக்க.. மத்திய அரசு அனுப்பிய எச்சரிக்கை.. களமிறங்கும் சைபர் படை.. என்ன வார்னிங் தெரியுமா?
சென்னை: சமீபத்தில் மக்கள் இடையே தீவிரமாக பரவி வரும் டிஜிட்டல் அரஸ்ட், டிஜிட்டல் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் சைபர் கிரைம் I4C பிரிவின் கீழ் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் தெரியாத வீடியோ அழைப்புகள் அல்லது அந்நியர்கள் குறித்து உள்துறை அமைச்சகம் I4C உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. சைபர் குற்றவாளி உங்களை மிரட்டலாம். எச்சரிக்கையாக இருங்கள். பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என்று அந்த மெசேஜ் தமிழிலும், I4C, Min of Home Affairs alerts against unknown video calls or strangers on social media. cybercriminal may blackmail you. Stay Alert. Call 1930, if fall victim என்று ஆங்கிலத்திலும் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் அரெஸ்ட்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரித்து உள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குடிமக்களை மோசடியில் இருந்து பாதுகாக்க முடியும் என்று எச்சரித்து உள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதும், ஆன்லைன் மோசடிகளில் இருந்து விலகி இருப்பதும் அவசியம். சாத்தியமான மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து விலகி இருப்பது.. பாதுகாப்பாக இருப்பது அவசியம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் குறித்து எச்சரித்து உள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

காலர் டோன் எச்சரிக்கை:
ஏற்கனவே மக்களிடம் இதற்காக டிஜிட்டல் அரெஸ்ட் தொடர்பாக போன் கால்களில் வரும் காலர் டோன் மூலம் எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்தது. அதில், உங்களிடம் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், அல்லது உயர் தலைவர்கள் என்ற பெயரில் யாராவது பேசினாலோ.. வீடியோ காலில் பேசினாலோ அதை நம்ப வேண்டாம். அவர்கள் சைபர் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
அது போன்ற போன் கால்கள் வந்தால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சைபர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் என்று காலர் டோன் மூலம் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
பிக்பாஸ் சவுந்தர்யாவிற்கு நேர்ந்த சம்பவம்:
பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட போட்டியாளர் சவுந்தர்யா சமீபத்தில் 17 லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகவும்.. ஒரு கும்பல் தனது பணத்தை மோசடி செய்து பறித்துவிட்டதாகவும் கூறி இருந்தார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
போலீசாரிடம் பதியப்பட்ட எப் ஐ ஆர் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன. சவுந்தர்யா சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது இந்த முறைகேடு நடந்து உள்ளது. அப்போது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.
மும்பையில் இருந்து ஈரானுக்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம்.
சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளோம். விசாரணை செய்து வருகிறோம். நான் ராகேஷ் சர்மா. உங்களுக்கு ஸ்கைப் கால் செய்கிறேன் என்று கூறி போன் செய்துள்ளார். அதன்பின் அந்த போன் காலிலேயே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளேன். உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதால் நீங்கள் எதுவும் செய்ய கூடாது.
நீங்கள் யாரிடமும் பேச கூடாது. உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. நீங்கள் எத்தனை நாட்களாக போதை பொருள் கடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதை அடுத்து சிபிஐ தொடர்பான ஆவணங்கள், ஆர்பிஐ தொடர்பான ஆவணங்களை அனுப்பி உள்ளார். அதில் சவுந்தர்யா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து பயந்த சவுந்தர்யா அந்த நபருக்கு பணம் அனுப்பி உள்ளார். மொத்தமாக 12 பணபரிவர்த்தனைகள் மூலம் பணம் அனுப்பி உள்ளார்.
வழக்கு நடத்த, ஜாமீன் வழங்க, விசாரணையை சென்னைக்கு மாற்ற என்று பல காரணங்களுக்காக பணம் அனுப்பி உள்ளார். மொத்தமாக இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 17 லட்சம் அனுப்பி உள்ளார். இப்படித்தான் அவர் பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டில், FedEx, DHL, BlueDart, DTDC போன்ற கூரியர் நிறுவனங்களின் பெயரில் நடந்த இந்த மோசடிகளில் பலர் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில், மோசடி செய்பவர்கள் குறிவைக்கப்பட்ட நபர்களை போனில் அழைத்து, உங்கள் பெயரில் ஒரு கூரியர் வந்துள்ளது. அந்த கூரியர் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக கூறி மிரட்டுவதை வழக்கமாய் வைத்துள்ளனர்..
உதாரணமாக சென்னையில் இருந்து ரஷ்யாவிற்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம் என்று மிரட்டுவார்கள். அதன்பின் வழக்கு நடத்த.. ஜாமீன் வழங்க, விசாரணையை அவர்களின் ஊருக்கு மாற்ற என்று பல காரணங்களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறந்து பல லட்சம் பணத்தை ஏமாற்றுவார்கள். இது போன்ற கால்கள் வந்தால் நம்ப கூடாது.. அதை நம்ப ஏமாற கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications