சென்னை ஏர்ஷோ.. ஸ்தம்பித்த சென்னை.. அல்லோலப்பட்ட மக்கள்.. குளறுபடி நடந்தது எங்கே?
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி வியக்க வைக்கும் வகையில் நடந்தது. ஆனால் சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு பெரும் வேதனையே கிடைத்தது என்றும் சொல்லும் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் பல மணி நேரம் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய குளறுபடிக்கு காரணம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்திய விமானப்படை கடந்த 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 92-ம் ஆண்டு நிறைவடைந்து 93-ம் ஆண்டில் இந்திய விமானப் படை அடியெடுத்து வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினம் நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அதிநவீன விமான போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டுக்கான விமானப்படை தினம் சென்னையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சியுடன் நடந்தது.

மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை என 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் பல்டி அடித்து சாகசம் காட்டியது. சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்களை நிகழ்த்தின.
இந்த சாகச நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெரினாவிற்கு திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததால் மக்கள், தப்பித்தோம் இன்றைக்கு பெரிதாக வெயில் இருக்காது என்ற மனநிலையுடன் வந்தனர். ஆனால், நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மெரினாவில் குடி தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. சிலர் முன்னேற்பாடாக பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்தார்கள். ஆனாலும் அது போதவில்லை.
வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்சத்து குறைந்து 200-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கொண்டு செல்ல போலீசார் முயற்சித்தனர். ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். தற்போது வரை 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பின்னர் பலர் வீட்டிற்கு திரும்பினர். மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் போதுமான குடிநீர் வசதி செய்துகொடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இவ்வளவு லட்சக்கணக்கான மக்கள் கூடுவதை முன்கூட்டியே அறிந்து போதுமான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்றும், ஆனால் எந்த ஏற்பாடும் செய்யவில்லை எனவும் மக்கள் வேதனையை கொட்டி தீர்த்தனர். சில மக்கள் கோபத்தின் உச்சியில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு பெரும் வேதனையே கிடைத்தது என்று சொல்லும் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் பல மணி நேரம் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய குளறுபடிக்கு காரணம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..
* முதலில் இவ்வளவு பெரிய குளறுபடி ஏற்பட்டதற்கு முதல் காரணம் என்று வாகன நிறுத்தம் பகுதிகள்தான். கடற்கரை சாலையில் விஐபி மற்றும் விவிஐபி கார் பார்க்கிங் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. குறிப்பாக காமராஜர் சாலை மூடப்பட்டு இருந்தது.
* பிரெசிடன்சி கல்லூரி மற்றும் சுவாமி சிவானந்தா சாலை ஆகிய இடங்களில் உள்ள பார்க்கிங் பகுதியில் காலை 8 மணிக்கு முன்பாக வந்தவர்கள் பார்க் செய்ய முடிந்தது. 8 மணிக்கு பிறகு வந்தவர்கள் சாந்தோம் சாலையில் உள்ள பார்க்கிங் இடத்தில் வாகனங்ளை பார்க் செய்தனர். 21 இடங்களில் பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
* விமான சாகச நிகழ்ச்சி முடிந்ததும் , மக்கள் மொத்தமாக தங்கள் வாகனங்களை நிறுத்திவைத்து இருந்த பகுதிகளுக்கு சென்றனர். இதனால், சாலைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. பார்க்கிங் இடத்தில் இருந்தும் வண்டிகளை வெளியில் எடுக்க முடியாமல் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.
* சென்னை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களிலும் போதிய அளவில் முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. புறநகர் ரயிலில் சிறப்பு ரயில் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
புறநகர் ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளை இன்னும் அதிக அளவில் இயக்கியிருந்தால் இன்று ஏற்பட்ட நெரிசலை ஓரளவு தவிர்த்து இருக்கலாம் என்று பொதுமக்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. அதேபோல, கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்னை மெரினாவை சுற்றியுள்ள பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே முன் கூட்டியே திட்டமிட்டு போதுமான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்து இருந்தால் இந்த நெரிசலை தவிர்த்து இருக்கலாம் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications