நான் பாவாடையும் கிடையாது, சங்கியும் கிடையாது.. எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க! ஆதங்கப்பட்ட ஆர்ஜே பாலாஜி
சென்னை: திரைப்படத்திற்கு கிடைக்கும் எதிர்மறையான விமர்சனங்களை பார்க்கும் போது பொதுவெளியில் பேசவே பயமாக இருக்கிறது என்றும், என்னை பாவாடை என்றும் சங்கி என்று விமர்சித்ததாகவும் நடிகர் ஆர் ஜே பாலாஜி கூறினார். சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இவ்வாறு அவர் பேசினார்.
சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சொர்க்கவாசல் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் ஆர்ஜே பாலாஜி, நான் பாவாடை கிடையாது.. சங்கியும் கிடையாது.. சினிமாவில் அரசியலை செய்யாதீங்க என்று பேசினார். ஆர்ஜே பாலாஜி பேசியதாவது:-

இப்போ எல்லாம் ரொம்ப பயமா இருக்கு. இந்திய தேசியக்க்கொடி இருந்தது. அதை எடுத்து போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்போ.. இத வச்சி யாரும் பிரங்க் பண்ணிடுவாங்களோ.. நம்மள எதும் சொல்லிடுவாங்களோ.. நாம் இந்தியான் தான்.. இருந்தாலும் எதோ பயமாக இருக்கு. ஏனென்றால், இன்றைக்கு டிரைலர் வருது என்று ஒரு ட்வீட் போட்டேன்.
பாவாடை என்றார்கள்: அப்போது அதில் வந்து ஒருவர் என்னை திட்டுகிறார். என்னுடைய டிஸ்ட்ரிபியூட்டர் மீதான கோவத்தில் என்னை வந்து திட்டி பேசுறாங்க.. அவங்க மேல உள்ள கோவத்தை மற்றொருவர் மேல காட்டுகிறார்கள். அப்படித்தான் என்ன பாவாடை என்றார்கள். இவன் ஒரு பாவாடை.. இவன் படத்தை அடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் வேஷ்டி என்பதை சொல்லிக்கொள்கிறேன். பாவாடை கிடையாது.
சங்கி கிடையாது: முதலில் எனக்கு பாவாடை என்றால் என்ன என்பதே புரியல. நான் பாவாடை இல்லை என்பதால், இன்னொரு பக்கம் என்னை சங்கி என்று சொல்வாங்க. நான் சங்கியும் கிடையாது. எந்த பக்கத்துல எந்த அரசியல் கட்சியை சேர்ந்த ஐடி விங்காக இருந்தாலும் சரி... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. நீங்க அரசியல் பண்ணுங்க.. உங்க அரசியலை பாருங்க.. சினிமாவுல ஏன் அரசியல் பண்றீங்க.. வாரம் வாரம் ஒரு படம் வெளியாகிறது..
பேடிஎம்மில் பணம் ஏறுது: அத அடிக்க ஏன் உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க.. அதுக்கா உங்களுக்கு பேடிஎம்மில் பணம் கிரெடிட் ஆகிறது... போங்க போய் உங்க அரசியல்வாதிகளுக்கு உள்ள போய் சண்டை போட்டுக்கோங்க.. படத்தை எல்லாம் பிரியா விட்டுடுங்க.. ரசிகர்கள் இருக்காங்க.. ரசிகர்களுக்கும் இதே வேண்டுகோளை தான் வைக்கிறேன். விஜய், ரஜினி, அஜித், கமல், சூர்யா ரசிகர்கள் இருக்காங்க.. எல்லார் படத்தையும் பாருங்கள்.
படம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்க வில்லை என்று சொல்லுங்கள். எல்லாருமே படத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் இந்த நடிகரோட படம் வருது. அதை குறிவைத்து அடிக்க வேண்டும் என்று மட்டும் செய்யாதீங்க. இவங்க படத்த அவங்களும், அவங்க படம் வரும்போது இவங்களும் மாறி மாறி அடிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்து எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க.
ஒரு படத்தை குறி வைத்து அடிக்க நினைப்பது பயமாக இருக்கிறது. நான் பாவாடையும் கிடையாது.. பேண்ட், சட்டையும் கிடையாது.. சங்கியும் கிடையாது.. உபியும் கிடையாது.. இவரு ஃபேனும் கிடையாது.. அவருஃபேனும் கிடையாது.. இந்த படம் நல்ல படமாக இருக்கும். எல்லாருக்கு நன்றி. இவ்வாறு ஆர்ஜே பாலாஜி பேசினார்.












Click it and Unblock the Notifications