"இறையன்பு" பதவி..விரட்டி விரட்டி வேலை வாங்கும் "இவரா" தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர்? கோட்டை பரபர
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அடுத்த தலைமை செயலாளர் யார் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறதாம்.
இறையன்பு ஓய்வு பெற்றாலும்கூட, இன்னும் சிலகாலம் இறையன்புவை தங்களுடன் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று திமுக மேலிடம் நினைக்கிறது..
அடுத்த பதவி: கடந்த காலங்களில் தலைமை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், கிரிஜா வைத்தியநாதன், சண்முகம் உள்ளிட்டோருக்கு பதவி நீட்டிப்புகள் வழங்கப்பட்டிருந்தன..
குறிப்பாக, இவர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு, "ஆலோசகர், பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்" போன்ற முக்கிய பொறுப்புகளும் அப்போது தரப்பட்டன.. எனவே, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் முக்கிய இடங்களில் ஒன்றினை இறையன்புக்கு தந்து, தங்கள் ஆட்சிக்காலத்தில் தக்க வைத்து கொள்ள முதல்வர் தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.. இதற்காக சில பதவிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இறையன்பு: அதேசமயம், இறையன்பு ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது. ஆனாலும், புதிய தலைமைச் செயலாளர் யார் ? என்பதில் முடிவெடுக்க தடுமாறி வருகிறாராம் முதல்வர் ஸ்டாலின்..

இதனால், புதிய தலைமைச் செயலாளர் யார் ? என கோட்டையில் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறதாம்.. அனேகமாக இன்று இரவு, இதற்கு முடிவு ஒரு தெரிந்து விடும் என சொல்லப்படுகிறது. இதனிடையே சில அதிகாரிகளின் பெயர்கள் லிஸ்ட்டில் பரபரத்து வருகிறது. அந்த ஐஏஎஸ் சீனியாரிட்டி பட்டியலில், முதலிடத்தில் இருக்கும் ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கும், 12- வது இடத்தில் இருக்கும் சிவ்தாஸ் மீனாவுக்கும் இடையேதான் இறுதி கட்டப்போட்டி நடந்து வருகிறதாம்.
டாப் லிஸ்ட்: பொதுவாக, "டிஜிபி பதவிக்கு தேர்வு செய்யப்படுவதில் சீனியாரிட்டிபடி முதல் மூன்று இடத்தில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் கிடைத்ததும் அந்த பட்டியலில் ஒருவரை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் என முதல்வரின் விருப்பத்துக்கு விட்டுவிடுவார்கள். அதே பாணியில் தலைமைச்செயலாளர் தேர்வு நடக்கட்டுமே. ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால், அப்படி நடப்பதில்லை. அந்த வகையில் சீனியாரிட்டிபடி முதலிடத்தில் இருப்பவரும், நிர்வாகத் திறமையானவருமான ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைமைச் செயலாளராக்கலாம்" என்கிறார்கள் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
ஸ்டாலின் சாய்ஸ்: சீனியர்களிடமும், செயலாளர் மற்றும் ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகளிடமும் ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனால், ஹன்ஸ்ராஜ்வர்மாவா? சிவ்தாஸ் மீனாவா? யாரை டிக் அடிப்பது என்பதை யோசித்தபடி இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
சிவதாஸ் மீனாவின் பூர்வீகம் ராஜஸ்தான்... ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்.. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தபோது, சக்திவாய்ந்த அதிகாரியாக வலம்வந்தார்.. அதன்பிறகு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டு சிவதாஸ் மீனா டெல்லி அனுப்பப்பட்டார்.
சிவதாஸ் மீனா: எடப்பாடி பழனிசாமி டெல்லி லாபிக்கு, சிவதாஸ் மீனாவை வைத்து காய்களை நகர்த்தும் திட்டமும் இருப்பதாக அப்போது சலசலக்கப்பட்டது.. ஆனால், கடைசிவரை அந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு பிறகு திமுக அரசு 10 ஆண்டுகள் கழித்து பொறுப்புக்கு வந்ததுமே, மறுபடியும் தமிழ்நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டார் சிவதாஸ் மீனா.
வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் மிகவும் சீனியர்... 30 வருடங்கள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர்... அதைவிட முக்கியமாக சூழ்நிலையில் திறம்பட செயல்படக் கூடியவரும்கூட..
குட்புக்: ஸ்டாலின் குட்புக்கில் ஏற்கனவே இடம்பெற்றவர்.. அதிகாரிகளை விரட்டியும், கண்டிப்புகளை காட்டியும், நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய திறமைசாலி... இவ்வளவு பிளஸ்பாயிண்ட்கள் இருக்கும் நிலையில், இவரைதான் ஸ்டாலின் தேர்வு செய்யக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பும் சூழ்ந்து வருகிறது.. எதுவானாலும் இன்று இரவுக்குள் முடிவு தெரிந்துவிடும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications