விபத்தில் சிக்கிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கார்.. சென்னையில் பரபரப்பு.. போக்குவரத்தை அவரே சரி செய்தார்
சென்னை: சென்னையில் கூட்டுறவு துறை செயலாளர் ஐஏஎஸ் ராதாகிருஷ்ணனின் வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேல்மருவத்தூரில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
18ஆவது ஆண்டு சுனாமி நினைவுதினத்தையொட்டி, சென்னை பட்டினம்பாக்கத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ . ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மேல்மருவத்தூரில் இருந்து வந்த சுற்றுலா வேன் ஒன்று ராதாகிருஷ்ணன் பயணித்த கார் மீது வேகமாக மோதியது. இதில் அவரது காரின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு
ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் 200 மீட்டர் தொலைவில் மெரினா காவல் நிலையம் இருந்தும் கூட அங்கிருந்து போலீஸார் யாரும் வரவில்லை. இதனால் ராதாகிருஷ்ணனே போக்குவரத்தை சரி செய்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தார். பின்னர் தகவலறிந்த மெரினா காவல் நிலைய போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தி அந்த சுற்றுலா வாகனம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

சுற்றுலா வாகனம்
சுற்றுலா வாகனம் வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஜெ. ராதாகிருஷ்ணன் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார். கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக ராதாகிருஷ்ணன் இருந்தார்.

சீரமைப்பு பணிகள்
இவர் களத்தில் இறங்கி பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தாய், தந்தையை இழந்த பல்வேறு குழந்தைகளை அரசு காப்பகத்தில் சேர்த்தார். சில குழந்தைகளை தானே தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான கல்வியை கொடுத்தார். அவர்களை நல்ல நிலைக்கு ஆளாக்கியுள்ளார். இவரால் அரசு காப்பகத்தில் சேர்த்த குழந்தைகள் இன்று கல்யாண வயதை எட்டியுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி
அவர்களுக்கு திருமணம் என்றால் ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் தனது மனைவியுடன் போய் கலந்து கொள்கிறார். அந்த காப்பக குழந்தைகளும் இவரை அப்பா என்றும் அவர் மனைவியை அம்மா என்றும் அழைக்கிறார்கள். கொரோனா காலத்தை தவிர மற்ற காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது அரசு காப்பகத்திற்கு சென்று தான் சேர்த்துவிட்ட குழந்தைகளிடம் குறை கேட்கும் பழக்கத்தை இன்று வரை கடைபிடித்து வருகிறார்.

பேரிடர் மீட்பு ஸ்பெஷலிஸ்ட்
பேரிடர் மீட்பு துறையின் ஸ்பெஷலிஸ்ட் எனும் சொல்லும் அளவுக்கு எந்த இயற்கை இடர் என்றால் அதை எதிர்கொண்டு மக்களை காப்பதில் வல்லவர். அது போல் கொரோனா காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் 24 மணி நேரமும் தனது பணியில் தீவிரமாக இருந்தார். பேருந்து நிலையம், ரயில் நிலையம் , விமான நிலையம், பொது மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தெரிவித்திருந்தார்.

கூட்டுறவுத் துறை செயலாளர்
கூட்டுறவுத் துறை செயலாளராக இருக்கும் இவர் அவ்வப்போது ரேஷன் கடைகளுக்கு ரெய்டு செல்கிறார். பொதுமக்களுக்கு நல்ல பொருட்கள் வழங்கப்படுகிறதா என கண்காணிக்கிறார். அரிசி கடத்தலை தடுக்கும் முயற்சியிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இவரது கார் இன்றைய தினம் விபத்தில் சிக்கியது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதே போல் கடந்த 2021 ஆம் ஆண்டும் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் ஆய்வு நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையத்திற்ரு வந்தார். அப்போதும் அவரது கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications