தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ் குமார் நியமனம்
சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஸ் அதிகாரி கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநரின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் செயலாளராக இருந்த ஆனந்த் பாட்டீல் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டதால் புதிய செயலாளாராக கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் அண்மையில் மத்திய அரசு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநரின் தனி செயலாளரக நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் தனி செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். அதன்பிறகு தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் அவரது செயலாளராகவும் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டார்.

மத்திய அரசின் பணிக்காக அவர் மாற்றப்பட்டதையடுத்து, ஒன்றிய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை இணைச்செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் தனி செயலாளராக கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications