Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலிர்க்குதே! இப்படியும் ஒரு தலைவரா? கிரைண்டரும்.. ரூ.4,850 செக்கும்! அப்துல்கலாமால் நெகிழ்ந்த ஐஏஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்து அனைத்து தரப்பு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து மறைந்தார். இந்நிலையில் தான் தற்போது அவரை பற்றிய ஒரு தகவல் வெளியாகி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏபிஜே அப்துல்கலாம். ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் முயற்சியும், பயிற்சியும் செய்தால் எத்தகைய உயர்பதவிகளையும் எட்டிப்பிடிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இவர் தான். அரசு பள்ளியில் படித்ததோடு, குடும்ப வறுமையை சமாளிக்க சிறுவயதில் வீடுகளுக்கு பேப்பர் டெலிவரி செய்து சாதித்தவர்.

IAS officer MV Rao praises APJ Abdul Kalam with the story of he paid Rs 4850 for his own gift wet Grinder

பள்ளிப்படிப்பை முடித்த அப்துல் காலம் திருச்சியில் இயற்பியில் பிரிவில் டிகிரி முடித்தார். அதன்பிறகு எம்ஐடியில் முதுகலை படிப்பை முடித்த அவர் டிஆர்டிஒவில் விஞ்ஞானியானார். பிறகு இஸ்ரோவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார். எல்எல்வி ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்காற்றினார்.

மேலும் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியதோடு, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவை திரும்பி பார்க்கவைத்தார். அதன்பிறகு 2002ல் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். 5 ஆண்டு அந்த பதவியை அவர் அலங்கரித்தார். இந்த வேளையில் அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். தனது குடும்ப உறுப்பினர்களை தன்னுடன் சேர்த்து கொள்ளாமல் தனியே அவர் வாழ்ந்தார்.

அதேவேளையில் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் மாணவ-மாணவிகளை தொடர்ந்து சந்தித்து வந்தோடு, அவர்களை ஊக்கப்படுத்தி மேடைகளில் பேசினார். இவரது பல பேச்சுகள் சிலிர்க்க வைத்ததோடு, சிந்திக்கவும் மாணவர்களை தூண்டியது. இதனால் மக்களின் ஜனாதிபதி என்ற பெயரை அப்துல் கலாம் பெற்றார். அதன்பிறகு 2015ல் ஜூலை 27 ல் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மாணவர்கள் மத்தியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து காலமானார்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 27 ம் தேதி ஜனாதிபதி அப்துல் கலாமின் 8 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் தற்போது அப்துல் கலாம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிலிர்க்க வைத்து இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரி எம்வி ராவ்.

அதாவது எம்வி ராவ் தனது ட்விட்டர் பதிவில் அப்துல் கலாமின் போட்டோ மற்றும் அப்துல் கலாம் கையெழுத்திட்ட ஒரு செக்கை பதிவிட்டுள்ளார். மேலும் அதனை பதிவிட்டதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அது அப்துல் கலாம் தனக்கு வந்த பரிசு பொருட்களை விரும்பாமல் எளிமையாக வாழ்ந்ததை காட்டிடும் வகையில் உள்ளதோடு, படிப்பவர்களை சிலிர்க்க வைக்கிறது. இதுதொடர்ாக எம்வி ராவ் வெளியிட்ட அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014ம் ஆண்டில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சிறந்து விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் ஸ்பான்சராக ‛சவ்பாக்யா வெட் கிரைண்டர்' எனும் நிறுவனம் இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் கலாமிற்கு அந்த நிறுவனம் சார்பில் வெட் கிரைண்டர் வழங்கப்பட்டது. இதனை அவர் ஏற்க மறுத்தார். இருப்பினும் கட்டாயப்படுத்தியதால் பொது நிகழ்ச்சி மேடையில் அப்துல் கலாம் நாகரீகம் கருதி ஏற்றுக்கொண்டார்.

IAS officer MV Rao praises APJ Abdul Kalam with the story of he paid Rs 4850 for his own gift wet Grinder

இருப்பினும் அடுத்த நாள் காலையில் அவர் வெட்கிரைண்டரின் விலையை கேட்டறிந்து அதற்கான தொகையை (ரூ.4,850) செக் மூலம் நிரப்பி அந்த நிறுவனத்துக்கு வழங்கினார். இதையடுத்து அந்த நிறுவனம் அவரது செக்கில் இருந்து பணம் எடுக்கவில்லை. இதனை அறிந்த அப்துல் கலாம் தனது செக்கை ஏற்று அதில் இருந்து வெட் கிரைண்டருக்கான பணத்தை எடுத்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வெட் கிரைண்டரை திரும்ப அனுப்பி வைக்க நேரிடும் என்றார்.

இதையடுத்து அப்துல் கலாமின் பேச்சை மீறாமல் அந்த நிறுவனம் அவரது செக்கை பயன்படுத்தி பணத்தை எடுத்து கொண்டது. இருப்பினும் அப்துல் கலாமின் இந்த செயலின் நினைவாக நிறுவனம் அந்த காசோலையை ஜெராக்ஸ் எடுத்து தனியே வைத்துள்ளது'' என்ற தகவல் குழுவில் வந்தது என தெரிவித்து நெகிழ்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் அப்துல் கலாமின் செயலை வியந்து பாராட்டி கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இன்று பல தலைவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி பல சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் சில எம்பிக்கள் தங்களின் பதவி போனாலும் கூட டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய மறுப்பது உண்டு. ஆனால் 5 ஆண்டு இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் தனது இறுதிக்காலம் வரை பல பரிசு பொருட்களை ஏற்க மறுத்து எளிமையாக இருந்தார் என்பது உண்மையிலேயே நெகிழ வைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+