மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக பணியாற்றிய.. உமாநாத் IAS வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக பணியாற்றிய டாக்டர். உமாநாத் ஐஏஎஸ் உட்பட தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உமாநாத் ஐஏஎஸ் தற்போது காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெளியிட்ட உத்தரவுப்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை பணிகள் இயக்குனரகத்தின் இயக்குனராக கிருஷ்ணனுன்னி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனராக எஸ்.பி அம்ரித் ஐஏஎஸ், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ஷில்பா பிரபாக சதீஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சற்று நேரத்துக்கு முன்பு தான் அருண் ஐபிஎஸ் அதிகாரி மாற்றப்பட்ட நிலையில் அடுத்ததாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

IAS Officers

அருண் ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தான் தமிழக அரசு, இன்று மாலையில் தான் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக இருந்த அருண் ஐபிஎஸ் அதிகாரியை, சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குனராக மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதற்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மகேஷ்வரி கூடுதலாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பொறுப்பையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அடுத்தத்தடுத்து மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

எஸ்பி அம்ரித் ஐஏஎஸ் நியமனம்

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்த எச். கிருஷ்ணனுன்னி ஐஏஎஸ், சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைப் பணிகள் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல் தொழிலாளர் ஆணையராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக டாக்டர் உமாநாத் ஐஏஎஸ்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளராக பணியாற்றியிருந்த உமாநாத் ஐஏஎஸ் தற்போது காத்திருப்பில் போடப்பட்டிருக்கிறார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைப் பணிகள் துறையின் இயக்குநராக இருந்த எஸ்.பி. அம்ரித் ஐஏஎஸ், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+