உதயச்சந்திரன் ஐஏஏஸ் மாற்றமா.. முதல்வர் ஸ்டாலின் தனிச்செயலாளர் இனி இவர்தானா.. எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தனிச்செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ், - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் குறித்த நீண்ட பட்டியலும் தயாராகி வருவதாக தெரிகிறது..
நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கான செயலர் பதவிக்கு உதயசந்திரன் நியமிக்கப்படுகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி உள்ளது.

உதயச்சந்திரன்: உதயச்சந்திரன் மாற்றம் குறித்து ஏற்கனவே சில தகவல்கள் கசிந்தன.. வழக்கமாக, தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் செயலாளர்கள் இருப்பார்கள்.. அந்தவகையில், முதல்வரின் கீழ் உள்ள தனிச்செயலாளார்களுக்கு அந்த துறைகளை பிரித்துக் கொடுப்பது மரபாக இருந்து வருகிறது.. துறைகளின் செயலாளர்களும், அந்தந்த தனிச்செயலாளர்களிடம் ஆலோசித்து செயல்படுவர். அந்தவகையில், உதயச்சந்திரனிடம் முக்கியத்துறைகள் இருக்கின்றன..
மற்ற தனிச்செயலர்களிடமும் சில துறைகள் இருக்கிறது என்றாலும், அனைத்து துறையின் செயலாளர்களும் முதல்வரை நேரடியாகவே சந்திக்கும் சூழல் உதயசந்திரனுக்கே உண்டு.. அதிலும் அடிக்கடி சந்தித்து, முதல்வரிடம் ஆலோசிப்பதால், இது பலரது கண்ணை உருத்துவதாகவும் சலசலக்கப்பட்டது.. அதனால், அவர்மீது சிலர் தேவையில்லாத புகார்களை வாசிப்பதாகவும், கோட்டையில் தகவல் கசிந்தபடியே இருந்தன.

சிந்தனையாளர்: எனினும், மிகச்சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், சமூக பொறுப்பாளர் என்ற பல்வேறு அடையாளங்களை உதயச்சந்திரன் பெற்றுள்ள நிலையில், அவருக்கான ஆதரவுகள் அதிகமாகவே உள்ளதாக சொல்கிறார்கள்.. மேலும், முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதால், அவர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் பரபரத்தன. இப்படிப்பட்ட சூழலில்தான்,நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கான செயலர் பதவிக்கு உதயசந்திரன் நியமிக்கப்படுகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி உள்ளது.
அதேபோல, முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலராக மூத்த ஐ.ஏ. எஸ்., அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளதாகவும் சொல்கிறார்கள். இதுகுறித்தும் சில தகவல்கள் ஏற்கனவே வலம்வந்தன.. தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டவர்.. இதற்கு முன்னதாக பல்வேறு அரசு பணிகளில் அவர் பணியாற்றி உள்ளார். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மை செயலராக அவர் இருந்தவரும்கூட..
ராஜேஷ் லக்கானி: கடந்த 2015-ல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றதுமே மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது பணப்பட்டுவாடா சமயத்தில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவை நிறுத்திவைத்தவர்.. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே பணப்பட்டுவாடாவால் தேர்தலை நிறுத்தியது அதுவே முதல்முறை.. இதற்கு காரணம் ராஜேஷ் லக்கானி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லக்கானி பரிந்துரை செய்ததன்பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது... அப்போது, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நீடிக்க விருப்பம் இல்லை என மேலிடத்தில் வெளிப்படையாகவே சொன்னவர்.. எனினும் இடைத்தேர்தல் முடிந்தபிறகே அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்...

ஸ்மார்ட் + ஆக்டிவ்: முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதுமே, ஸ்மார்ட் + ஆக்டிவ்வாக செயல்படும் அதிகாரிகளின் லிஸ்ட்டை கையில் எடுத்தார்.. அதில் இடம்பெற்றிருந்தவர் ராஜேஷ் லக்கானி.. அதன்படிதான், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கு பிறகு, பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றத்தை முதல்வர் செய்யப்போவதாகவும், அந்தவகையில், ராஜேஷ் லக்கானியை தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்புக்கு அழைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு எதுவுமே வராமல் இருந்தது.. இப்போது மீண்டும் ராஜேஷ் லக்கானி பெயர் அடிபடத்துவங்கி உள்ளது, கோட்டையில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications