பிரதமர் மோடியை விமர்சித்த குழந்தைகள் நிகழ்ச்சி- தனியார் டிவி பதிலளிக்க மத்திய அரசு நோட்டீஸ்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த குழந்தைகள் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தமிழ் டிவி சேனல் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஷோ நடைபெற்றது. இதில் இம்சை அரசன் 2-ம் புலிகேசி போலவும் அவரது அமைச்சர் போலவும் சிறுவர்கள் வேடமிட்டு காமெடி நிகழ்ச்சி நடத்தினர்.

சிந்தியா நாட்டு பிரதமர்
இதில் பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம், பொருளாதார சரிவு என பல அம்சங்கள் விமர்சிக்கப்பட்டிருந்தன. இதில் படு உச்சமாக, இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரிதான் முட்டாள் தனமா பண்ணாரு. ஆனால் கருப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு. கலர் கலரா கோர்ட்டை மாத்திட்டுல சுத்துனாரு என ஒரு சிறுவன் பேசுவதாக காட்சி இடம் பெற்றிருந்தது.

பாஜகவினர் ஆவேசம்
இது பாஜகவினரை கடுமையாக கொந்தளிக்க வைத்தது. மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி அத்தனை நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக புகார் கொடுத்தனர். இதன்பிறகு இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டு தீயாகப் பரவியது. சிறுவர்களுடன் பாஜக மல்லுக்கட்டுகிறது என்பதை வைத்தும் ஹேஷ்டெக்குகள் டிரெண்டிங்காகின.

அண்ணாமலை பதிவும் நோட்டீஸும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில், ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி மத்திய இணை அமைச்சர் முருகன் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார் என கூறியிருந்தார். இதனையடுத்து மத்திய தகவல், தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு பதில் கேட்டு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதிலளிக்காவிட்டால்....
மேலும் இப்புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்; இல்லை எனில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை போலீசாரும் தொடர்புடைய தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகளை நேரில் வரவழைத்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. சிறுவர்கள் நிகழ்ச்சி தொடர்பான விவகாரம் இப்போது நாடு தழுவிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications