ICICI Bank: மினிமம் பேலன்ஸ்.. புதிய வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐசிஐசிஐ வங்கி
சென்னை: புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது ஐசிஐசிஐ. இனிமேல் நகர்ப்புறப் பகுதிகளில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகை ரூ.50 ஆயிரம் வைத்திருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை (Average minimum balance) நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது ஐசிஐசிஐ வங்கி.

இதுவே சிறு நகரங்களுக்கு ரூ.25,000 ஆகவும், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய முறையே தொடரும் என்றும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500, இதில் எது குறைவாக இருக்கிறதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸை பராமரிக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட தொகையை, வாடிக்கையாளர் தங்களது சேமிப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டும். வங்கிகள் அந்தக் கணக்கின் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த மினிமம் பேலன்ஸை பயன்படுத்தும். இந்த மினிமம் பேலன்ஸை வைத்திருக்க சூழலில், அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கும்.
ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கென மினிமம் பேலன்ஸ் விதிகளை வைத்துள்ளது. மெட்ரோ நகரங்களுக்கு என்றால் அதிக தொகையும், கிராமங்களுக்கு என்றால் குறைந்த தொகையும் மினிமம் பேலன்ஸ் ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
உள்நாட்டு வங்கிகளில், ஐசிஐசிஐ தான் மிக உயர்ந்த குறைந்தபட்ச இருப்புத் தேவையை நிர்ணயித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2020 ஆம் ஆண்டில் மினிமம் பேலன்ஸ் விதியை முற்றிலுமாக ரத்து செய்தது, அதே நேரத்தில் பெரும்பாலான வங்கிகள் செயல்பாட்டுச் செலவுகளை நிர்வகிக்க குறைந்த மினிமம் பேலன்ஸ், பொதுவாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை பராமரிக்க அறிவுறுத்துகின்றன.
ஐசிஐசிஐ வங்கி இப்போது UPI பணம் செலுத்துதலுக்கான பரிவர்த்தனைகளுக்கும் பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கிறது. ஐசிஐசிஐ வங்கியில் எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்கும் பிஏக்களுக்கு, ஐசிஐசிஐ வங்கி ஆனது ஒரு பரிவர்த்தனைக்கு 2 பேஸிஸ் பாயிண்ட்களை வசூலிக்கும், இது அதிகபட்சமாக ரூ.6 இருக்கும். எஸ்க்ரோ அக்கவுண்ட்டை பராமரிக்காத பிஏக்களுக்கு, கட்டணம் 4 பேஸிஸ் பாயிண்ட்களாக இருக்கும், அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications