ஐசிஐசிஐ வங்கியில் ரூ.50000 மினிமம் பேலன்ஸ்! 50 ஆயிரம் உயர்வு குறித்து ரிசர்வ் பேங்க் ஆளுநர் விளக்கம்
சென்னை: இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு வங்கியும், வங்கிகளின் விதிமுறைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயம் செய்கின்றன. அந்தவகையில், ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. இந்த அதிரடி நடவடிக்கையானது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து ரிசர்வ் வங்கி, விளக்கம் ஒன்றை தந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியில் நகர்ப்புறங்களில் புதிதாக கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்று 2 நாட்களுக்கு முன்பு திடீரென அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது,.

சேமிப்பு கணக்கு
கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிமுறையின்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் இனிமேல் 10000 ரூபாய்க்குப் பதிலாக 50000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் அல்லது மாதத்தில் ஒரு நாள் 15 லட்சம் ரூபாயை இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது..
அதேபோலவே, சிறு நகரங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், கிராமப்புற பகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்புத்தொகை குறைவாக உள்ளவர்களுக்கு 6 சதவீதம் அல்லது 500ரூபாய், இதில் எது குறைவாக இருக்கிறதோ அதை அபராதமாக வசூலிக்கப்படும்.
பண பரிவர்த்தனை
மேலும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் 3 பண பரிவர்த்தனைகள் மட்டும் இலவசமாக மேற்கொள்ளலாம். அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய கட்டணமாக 150 ரூபாய் அல்லது 1000 ரூபாய்க்கு 3 ரூபாய் 50 காசுகள், இதில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வங்கி கணக்கு துவங்குவோர்கள், மினிமம் பேலன்ஸ் குறித்த இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கையால், வாடிக்கையாளர்கள் பலரும் சேமிப்பு கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி விடலாமா என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மினிமம் பேலன்ஸ் 50000
ஐசிஐசிஐ வங்கி இப்படி குறைந்தபட்ச இருப்பு தொகையை உயர்த்தியது மத்திய அரசின் அனைவருக்கும் வங்கி சேவை நோக்கத்திற்கு எதிரானது என வங்கி வாடிக்கையாளர்களுக்கான பொதுநல அமைப்பு தெரிவித்தது..
மேலும், இதுதொடர்பாக, அந்த அமைப்பு மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தது.. அதில், ICICI வங்கியின் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும் என்றும் வாடிக்கையாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ரிசர்வ் வங்கி விளக்கம்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
மினிமம் பேலன்ஸ் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி எப்போதுமே தலையிடாது. காரணம், அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. அதாவது மினிமம் பேலன்ஸை நிர்ணயம் செய்வது ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை வரம்புக்குள் வராது. இதற்கான முழு உரிமையை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
வங்கிக்கு வங்கி மினிமம் பேலன்ஸ் நிர்ணயம் வேறுபடுகிறது. ஒருசில வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என வங்கிகள் விலக்கும் அளித்துள்ளன" என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications