இன்பநிதி என்ட்ரி.. உதயநிதி பாணியில் சினிமா துறையில் அறிமுகம்.. நடிகர் தனுஷ் வெளியிட்ட போஸ்டர்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக ‛என்ட்ரி' கொடுக்கிறார். நடிகர் தனுஷ் நடித்துள்ள ‛இட்லி கடை' படத்துக்கான தியேட்டர் ரிலீசை ‛ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வாங்கி உள்ளதோடு, அதனை இன்பநிதி பெயரில் வெளியிடுகிறது. இதற்கான அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'இட்லி கடை'.இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரகனி, ராஜ்கிரண், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தை ‛டான் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆதித்யா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இதற்கிடையே, 'இட்லி கடை' படத்தின் தியேட்டர் ரிலீசை ‛ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வாங்கி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி பெயரில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான போஸ்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‛இட்லிகடை' திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியீடு செய்கிறது. புதிய பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ள இன்ப உதயநிதிக்கு வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார். மேலும் அவர் போஸ்டரையும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையின் மூலமாக தான் அரசியலுக்குள் நடித்தார். ‛ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் மூலமாக திரைப்பட தயாரித்த அவர் நடிகராகவும் வலம் வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலமாக ஹீரோவானார். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தார்.
பிறகு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதன்பிறகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பதவியேற்றார். இப்போது துணை முதல்வராகி உள்ளார்.
அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியும் ‛ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் மூலமாக சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications