இடுக்கியை தமிழகத்துடன் இணைத்திடுங்கள்.. டிரென்டாகும் ஹேஷ்டேக்.. அனல் பறக்கும் ட்விட்டர் தளம்
சென்னை: தமிழகத்துடன் இடுக்கி மாவட்டத்தை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை ட்விட்டரில் வலுப்பெற்று வருகிறது. #SaveMullaiPeriyaarDam #AnnexIdukkiwithTN ஆகிய இரு ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
முல்லை பெரியாறு அணை இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. இங்கு தென் மேற்கு பருவமழையால் நீர் நிரம்பியுள்ளதால் சிறிதளவு நீரை தமிழகத்தில் திறந்துவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில்தான் நடிகர் ப்ரித்விராஜ் சர்ச்சைக்குரிய கருத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் தனது பதிவில் 125 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டுமே தவிர அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்வது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என பதிவிட்டிருந்தார்.

மம்முட்டி
இதையடுத்து மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோரின் ரசிகர்கள் மன்றத்தினரும் நடிகர் ப்ரித்விராஜின் கருத்தை ஆதரித்து அணையை இடிக்க வேண்டும் என பதிவு செய்தனர். ப்ரித்விராஜின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. பழமையான அணையின் பாரம்பரியம் தெரியாமல் அதை ஒரே வார்த்தையில் இடிக்க வேண்டும் என அலட்சியமாக பேசியதை அடுத்து ப்ரித்விராஜின் உருவப்படத்தையும் உருவபொம்மையையும் எரித்து தங்கள் எதிர்ப்பை விவசாய அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் செய்து வருவதாக செய்திகள் வருகின்றன.

கோரிக்கை
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை உள்ள இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. #SaveMullaiPeriyaarDam #AnnexIdukkiwithTN ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.

தமிழகம்
#AnnexIdukkiwithTN இடுக்கியை தமிழ்நாட்டுடன் இணையுங்கள். முல்லை பெரியாறு அணையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். இதனால் கேரளாவிற்கு ஆபத்து என்பதே இல்லை . திரும்ப திரும்ப பொய்யை பரப்பி பீதியை கிளப்பவேண்டாம்.

தமிழர் இழந்த நிலம்
1956 இல் இந்திய - திராவிட கூட்டு சதியால் தமிழர் இழந்த நிலம் இடுக்கி மாவட்டம் !
மீண்டும் இடுக்கியை தமிழ்நாட்டுடன் இணைப்போம் ! #AnnexIdukkiWithTN

உரிமை
என் மண் என் உரிமை எங்கள் எங்கள் பகுதி எங்களுக்கே
இடுக்கு தமிழகத்துடன் இணைக்க வேண்டும்
#AnnexIdukkiwithTN
Recommended Video

கடைசி வரை போராட வேண்டும்
#AnnexIdukkiWithTN , நாம் கடைசி வரை நின்று போராட வேண்டும் எக்காரணம் கொண்டு விட்டுவிட கூடாது இடுக்கி யை மீட்டு எடுப்போம் முக்கியமாக தமிழர்கள் இந்த விசயத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ஒரே தீர்வு
முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு ஒரே தீர்வு
இழந்த தமிழர் பகுதியான இடுக்கி மாவட்டத்தை
மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோருவதே.

தமிழகத்துடன் இடுக்கி
மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது இடுக்கி தமிழகத்துடன் இணைந்திருந்தது. ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக அது கேரளாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே இடுக்கியை தமிழகத்துடன் இணையுங்கள் என தமிழர்கள் கேட்க வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.












Click it and Unblock the Notifications