அண்ணாமலையை தொட்டு விடுவீர்களா? "தமிழ்நாடு தாங்காது" - ஸ்டாலினை அட்டாக் செய்த எச். ராஜா
"இன்றைக்கு தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது"
சென்னை: வட மாநிலத்தவர் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்திருக்கிறார் எச். ராஜா.
தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பலர் அடித்துக் கொலை செய்யப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பரவிய செய்திகள் நாடு முழுவதும் புயலை கிளப்பின. பீகார் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் அளவுக்கு இது சென்றது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் இவை அனைத்தும் போலி வீடியோக்கள் என்பது தெரியவந்தது.
கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் என்றைக்கோ நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, அது தமிழகத்தில் வட மாநிலத்தவருக்கு எதிராக நடந்தது போன்ற மாயத்தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்கி வந்தது தெரியவந்தது. மேலும், பீகாரில் இருந்து தமிழகம் வந்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் இங்கு வட மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என அறிவித்தனர்.

சவால்விட்ட அண்ணாமலை
இதன் தொடர்ச்சியாக, வட மாநிலத்தவர் குறித்த வதந்திகளை பரப்பியவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, பீகார் பாஜக சமூக ஊடகப்பிரிவுதான் இந்த சதிச்செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும், வட மாநிலத்தவர்கள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, திரானி இருந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என தமிழக அரசுக்கு அண்ணாலை சவால் விடுத்துள்ளார். இதனால் அண்ணாமலை கைது செய்யப்படுவாரா என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வட மாநிலத்தவர் குறித்த வதந்திகளை பரப்பியவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, பீகார் பாஜக சமூக ஊடகப்பிரிவுதான் இந்த சதிச்செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும், வட மாநிலத்தவர்கள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, திரானி இருந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என தமிழக அரசுக்கு அண்ணாலை சவால் விடுத்துள்ளார். இதனால் அண்ணாமலை கைது செய்யப்படுவாரா என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. "குடிகாரர்களாக மாற்றிய திமுக"
இந்நிலையில், வட மாநிலத்தவர் விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: ஒருகாலத்தில், வட மாநிலத்தவர்களையும், இந்தி மொழியையும் அவதூறாக பேசி வந்த திமுகவினர், இன்று வட மாநிலத்தவருக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனர். காரணம் என்ன.. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் வட மாநிலத்தவர்கள்தான் வேலை செய்கின்றனர். அவர்கள் இல்லை என்றால் தமிழக பொருளாதாரமே சரிந்துவிடும். இதை நான் சொல்லவில்லை. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இன்றைக்கு தமிழர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களை திமுக அரசு குடிகாரர்களாக மாற்றிவிட்டது. இப்போது வட மாநிலத்தவரை நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

"அண்ணாமலையை தொட்டால்"..
இப்போது வட மாநிலத்தவர்களுக்கு ஆதரவாக பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் குறித்து விஷத்தை கக்கினார்கள். வட மாநிலத்தவர்கள் குறித்து முதல்வர் பேசியதையும் ஆர்.எஸ். பாரதி, பொன்முடி ஆகியோர் பேசியதையும் அடிக்கோடிட்டு காட்டி கருத்து தெரிவித்து வந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சும் கட்சியா பாஜக? நாங்களே பனங்காட்டு நரிகள். வழக்கை காட்டியெல்லாம் எங்களை பயமுறுத்த முடியாது. எங்கள் தலைவர் அண்ணாமலையை தொடடால் தமிழகம் தாங்காது. இதை ஓர் எச்சரிக்கையாகவே தமிழக அரசுக்கு கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எச். ராஜா கூறினார்.

பீகாரில் வேலைவாய்ப்பு இல்லையா..
முன்னதாக, செய்தியாளர் ஒருவர், பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை என்றும், அதனால்தான் அம்மாநிலத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதாக கூறுகிறார்களே.. என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த எச். ராஜா, "பீகாரில் வேலைவாய்ப்பு இல்லை என யார் சொன்னது.. டெல்லியில் லட்சக்கணக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள். கர்நாடகாவில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள். அப்படியென்றால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால்தான் அவர்கள் அங்கு இருக்கிறார்களா? என வினவினார்.
-
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications