நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகள்! அனுமதி வழங்க லஞ்சம் போதும்! ராஜேஸ்வரி பிரியா விளாசல்!
சென்னை: ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடினால் எப்படி மழை நீர் வடிந்து ஓடும்? என வினவியுள்ள அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, பெரும்பாலான கட்டிடங்கள்,வீடுகள் எல்லாம் ஏரியில் கட்டபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும்,அனுமதி வழங்க லஞ்சம் போதும் என்ற நிலை உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜேஸ்வரி பிரியா முன் வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வீடுகள், கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டிட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளில் முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப் படுகிறதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

சென்னையில் மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை. குறிப்பாக மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை இன்னும் மாறவில்லை.
இதனிடையே இது குறித்து ராஜேஸ்வரி பிரியா பகிர்ந்துகொண்ட தகவல் வருமாறு;
''ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடினால் எப்படி மழை நீர் வடிந்து ஓடும்? பெரும்பாலான கட்டிடங்கள்,வீடுகள் எல்லாம் ஏரியில் கட்டபட்டுள்ளது(அனுமதி வழங்க லஞ்சம் போதும்).
வெயில் நேரத்தில் செய்யப்பட வேண்டிய மழை நீர் வடிகால் பணிகள் மழை வரும்வரை காத்திருப்பு பட்டியலில் ஏன் போடபட்டது?
மழை நீரால் தலைநகரம் தத்தளிப்பது அவமானத்தின் உச்சம்.40 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லை.நோயாளிகளும்,கர்ப்பினி பெண்களும்,முதியோர்களும் வேதனையில் துடிக்கிறார்கள்.பலர் வீடின்றி தவிக்கும் அவல நிலை.
மழை நீரில் நடந்து சென்று மக்கள் அவதியில் தவிப்பதை பார்ப்பதைவிட (குறிப்பாக உதயநிதி அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்து) மக்களை பாதுகாக்கும் பணிகளை முன்பே செய்திருந்தால் இன்று மக்கள் அனைவரும் உங்களை தேடிவந்து நன்றி சொல்லி இருப்பார்கள். போதும் இந்த நாடகம்!'' இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications