8 மாத காத்திருப்பு..குரூப் 4 தேர்வில் முறைகேடுகளா?..உடனே இதை செய்ய வேண்டும்..பாய்ந்து வந்த அண்ணாமலை
சென்னை: தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பாக தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சியால் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஏஒ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 6 வகையான குரூப்-4 பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதியிருந்தனர்.

8 மாதங்களுக்கு பிறகு..
முதலில் சுமார் 7 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், காலிப்பணியிடங்கள் 10 ஆயிரத்து 117 ஆக அதிகரித்தது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்ட நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 24 ஆம் தேதி தேர்வு முடிவு வெளியானது. ஆனால் இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரே பயிற்சி மையத்தில்..
குறிப்பாக தென்காசியில் உள்ள ஒரே பயிற்சி மையத்தில் படித்த தேர்வர்கள் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக புகார்கள் எழுந்தன. அதேபோல நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்விலும் முறைகேடு புகார்கள் எழுந்தன. பல லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் தேர்வர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

உரிய விளக்கம் பெற்ற பின்னர்..
இதற்கு சட்டப்பேரவையில் பேசிய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "குரூப் 4 நில அளவர் தேர்வு முறைகேடு என்ற புகார் எழுந்தவுடனேயே அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது உரிய விளக்கம் பெற்ற பின்னர் அது பற்றி பேரவையில் தெரிவிக்கப்படும். குழப்பங்கள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விளக்கம் அளித்தார்.

இளைஞர்களை அவமதிப்பது போல..
இதனிடையே, தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணி
ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.

மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும்
உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications