தேர்தலுக்கு "நோ".. மீண்டும் அமைச்சரான நிர்மலா.. மீண்டும் நிதி அமைச்சரவையே ஒதுக்கீடு.. மோடி முடிவு
சென்னை: ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் இந்த முறையும் தேர்தலை சந்திக்காமல் அமைச்சராகி இருக்கிறார். அவர் அமைச்சரான நிலையில் நிதித்துறை அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் நியமன எம்பிக்களுக்கு பெரிதாக அமைச்சரவை பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று எதிர்பாக்கப்பட்டது. அதை மீறி ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் அமைச்சராகி உள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் நாட்டில் மைனாரிட்டி ஆட்சி அமைக்கப்பட உள்ளது. பாஜகவிற்கு தேர்தல் தோல்வியை விட மைனாரிட்டி ஆட்சி அமைப்பது என்பது மிக பெரிய தோல்வி.
தோல்விக்கு காரணம்: பாஜகவின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பலர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இது போக பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் மீது டெல்லி பாஜக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறதாம். அவரின் ஜிஎஸ்டி கொள்கைகள் பாஜக தோற்க முக்கிய காரணமாக அமைந்தது. அவர் மக்கள் மீது மிக அதிகமாக வரி விதித்தது பாஜகவின் தோல்விக்கு மிக பெரிய காரணமாக அமைந்தது.
அவரின் செயல்பாடுகள், கோபமான பதில்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாத செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. கொங்கு மண்டலத்தில் பாஜக மண்ணை கவ்வ ஜிஎஸ்டி ஒரு பெரிய காரணம்.
நிர்மலா சீதாராமன் பதவி மாற்றம்: இந்த நிலையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு எண்டு கார்டு போட பாஜக முடிவு செய்ததாக செய்திகள் வந்தன. அவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி உண்டு ஆனால் சிறிய பதவிதான். இதனால் இந்த முறை வேறு ஒருவர் நிதி அமைச்சர் ஆகிறார் என்று கூறப்பட்டது. பெரிதும் நியமன எம்பிக்களுக்கு பெரிதாக அமைச்சரவை பதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று எதிர்பாக்கப்பட்டது. அதை மீறி ராஜ்ய சபா எம்பி நிர்மலா சீதாராமன் அமைச்சராகி உள்ளார்.
நிதி அமைச்சர்; இந்த நிலையில் நிதி அமைச்சராக இரண்டு பேரின் பெயர் பரிந்துரையில் இருந்தது. ஒருவர் அமித் ஷா, இன்னொருவர் பியூஷ் கோயல். இருவரில் ஒருவர் நிதி அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது..
அமித் ஷா நிதி அமைச்சர் ஆனால் உள்துறையை அவர் கவனிக்க முடியாது. இதனால் அது சிவராஜ் சிங் சவுகானுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கணிப்புகளை எல்லாம் மீறி நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதித்துறை வழங்கப்பட்டு உள்ளது.
அரசாங்கத்தின் முழு போர்ட்ஃபோலியோ பட்டியல்
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவைகள்:
பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்;
அணுசக்தி துறை;
விண்வெளி துறை;
அனைத்து முக்கியமான கொள்கை சிக்கல்கள்
கேபினட் அமைச்சர்கள்
1. ராஜ் நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர்.
2. அமித் ஷா
உள்துறை அமைச்சர்; மற்றும்
கூட்டுறவு அமைச்சர்.
3. நிதின் ஜெய்ராம் கட்கரி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
4. ஜகத் பிரகாஷ் நத்தா
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்; மற்றும்
ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்.
5. சிவராஜ் சிங் சவுகான்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்; மற்றும்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.
6. நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர்; மற்றும்
கார்ப்பரேட் விவகார அமைச்சர்.
7. டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்
வெளிவிவகார அமைச்சர்.
8. மனோகர் லால்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர்; மற்றும்
மின்துறை அமைச்சர்.
9. எச்.டி.குமாரசாமி
கனரக தொழில்துறை அமைச்சர்; மற்றும்
எஃகு அமைச்சர்.
10. பியூஷ் கோயல்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்.
11. தர்மேந்திர பிரதான்
கல்வி அமைச்சர்.
12. ஜிதன் ராம் மஞ்சி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்.
13. லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்; மற்றும்
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.
14. சர்பானந்தா சோனோவால்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர்.
15. டாக்டர் வீரேந்திர குமார்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்.
16. கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.
17. பிரலாத் ஜோஷி
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்; மற்றும்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்.
18. ஜுவல் ஓரம்
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.
19. கிரிராஜ் சிங்
ஜவுளித்துறை அமைச்சர்.
20. அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர்;
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்; மற்றும்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.
21. ஜோதிராதித்யா எம்.சிந்தியா
தகவல் தொடர்பு அமைச்சர்; மற்றும்
வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.
22. பூபேந்தர் யாதவ்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்.
23. கஜேந்திர சிங் ஷெகாவத்
கலாச்சார அமைச்சர்; மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர்.
24. அன்னபூர்ணா தேவி
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
25. கிரண் ரிஜிஜு
பாராளுமன்ற விவகார அமைச்சர்; மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.
26. ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்
27. டாக்டர் மன்சுக் மாண்டவியா
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்; மற்றும்
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.
28. ஜி. கிஷன் ரெட்டி
நிலக்கரி அமைச்சர்; மற்றும்
சுரங்கத்துறை அமைச்சர்.
29. சிராக் பாஸ்வான்
உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர்.
30. சி ஆர் பாட்டீல்
ஜல் சக்தி அமைச்சர்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications